Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

மிதுன ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன் குரு பகை என்ற நிலையில் நின்று அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 வீட்டில் தன் துணைவிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் வாழ தேவையானவற்றை செய்யக்கூடியவர்கள். 

🌟 நல்ல தொழில் திறமைகளை உடையவர்கள். 

🌟 வரவுக்கு மீறிய செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 எங்கும், எதிலும் அளவோடு செயல்படக்கூடியவர்கள்.

🌟 வாக்கு பலிதம் உடையவர்கள். மற்றவர்களை கொண்டு தனது செயலை முடித்துக்கொள்வதில் வல்லவர்கள். 

🌟 தன்னை பற்றி தற்பெருமை பேசுவதில் வல்லவர்கள்.

🌟 அழகான ஆடம்பரமான உடைகளை அணிவதில் விருப்பம் உடையவர்கள. 

🌟 செய்யும் செயலால் ஏற்படும் ஆதாயம் மற்றும் அதைப் பற்றிய அறிவும் உடையவர்கள். 

🌟 நல்ல நிலையில் உள்ள சுற்றங்களையும், நண்பர்களையும் உடையவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செய்யும் செயல்கள் மூலம் தனக்கான ஆதாயத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள். 

🌟 எதையும் கடைசி நேரத்தில் பிறருடைய உதவியை நாடி தன்னுடைய வேலையை செய்து முடித்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 உடல் உழைப்பின்றி மூளையை மட்டும் பயன்படுத்தி செய்யும் வேலைகளில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 எதிலும், எங்கும் முழு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக