Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

இதற்கு நேரம் ஒதுக்குங்கள்... இதுதான் இளமையின் ரகசியம் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------

படிங்க... சிரிங்க...!!

-------------------------------------

சுரேஷ் : அவர் மாதத்துக்கு எப்படியும் பத்து பதினைந்து படத்துக்கு பூஜை போட்டுருவாரு.

ரமேஷ் : அவ்வளவு பெரிய டைரக்டரா?

சுரேஷ் : இல்லை... நல்ல சாஸ்திரிகள்.

ரமேஷ் : 😄😄

-------------------------------------

மாப்பிள்ளை வீட்டார் : பொண்ணுக்கு ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா?

பெண் வீட்டார் : அதுக்கு முன்னாடி உங்க பையனுக்கு சமைக்கத் தெரியுமான்னு சொல்லுங்க.

மாப்பிள்ளை வீட்டார் : 😧😧

-------------------------------------

அமலா : ஒரே தொடர் கனவா வருது.

விமலா : எப்படி தொடர் கனவுன்னு சொல்ற?

அமலா : எபிசோட் நம்பர் போட்டு வருதே...

விமலா : 😛😛

-------------------------------------

சிறந்த வரிகள்...!!!

-------------------------------------

 

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்,

அது இதயத்தின் இசை.

 

சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்,

அது சக்தியின் பிறப்பிடம்.

 

விளையாட நேரம் ஒதுக்குங்கள்,

அது இளமையின் ரகசியம்.

 

படிக்க நேரம் ஒதுக்குங்கள்,

அது அறிவின் ஊற்று.

 

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்,

அது மகிழ்ச்சியின் வழி.

 

உழைக்க நேரம் ஒதுக்குங்கள்,

அது வெற்றியின் விலை.

 

-------------------------------------

டங் டுவிஸ்டர்...!!!

-------------------------------------

நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்.

 

மருமகள் மாமியார்கிட்ட நான்தான்டி உனக்கு மாமியார்-ன்னு சொன்னாளாம். மருமகள் மாமியாராகியும், மாமியார் மருமகளாகியும் மாமியார் மருமகள் சண்டை ஓயலையாம்.

 

லகர ளகரமும் ழகர லகரமும் றகர ழகரமும் பழக்கத்தில் புழக்கத்தில் இருந்தாலும் குழந்தைகள் பேசும்போது வழ கொழ பேச்சாத்தான் இருக்கும்.

-------------------------------------

விடுகதைகள்...!!!

-------------------------------------

1. கீழேயும், மேலேயும் மண்... நடுவிலே அழகான பெண். அது என்ன? 

 

2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்? 

 

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? 

 

விடைகள் :

 

1. மஞ்சள்.

 

2. அலாரம்.

 

3. தராசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக