இந்தியாவின் முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனமான தவான் ஹவ்சிங் பைனான்ஸ் கார்ப் லிமிடெட் ( DHFL ) கடுமையான நிதிநெருக்கடி காரணமாகத் திவாலான நிலையில் இந்நிறுவன சொத்துக்கள் மற்றும் வர்த்தகத்தை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பல நிறுவனங்கள் இந்நிறுவன சொத்துக்களைக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் கொடுத்து வரும் நிலையில் அதானி குழுமத்தின் திடீர் மன மாற்றமும், புதிய விருப்ப விண்ணப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் கடந்த சில வருடமாகத் தனது வர்த்தகத்தைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது வீட்டுக் கடன் மற்றும் நிதியியல் சேவை பிரிவில் இறங்கும் முக்கியமான முயற்சியை எடுத்துள்ளார் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி.
பிராமல் எண்டர்பிரைசர்ஸ்
DHFL நிறுவனம் திவாலாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் சொத்துக்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்ட நிலையில் பிராமல் எண்டர்பிரைசர்ஸ் DHFL நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகத்திற்காக 25, 000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் குறிப்பிட்டு விருப்பம் விண்ணப்பம் கொடுத்திருந்தது.
ஓக்ட்ரீ
பிராமல் எண்டர்பிரைசர்ஸ் போல் ஓக்ட்ரீ நிறுவனம் DHFL நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற சுமார் 31,000 கோடி ரூபாய் அளவிலான விருப்பம் விண்ணப்பம் கொடுத்திருந்தது. இதே காலகட்டத்தில் அதானி குழுமம் DHFL நிறுவனத்தின் குறிப்பிட்ட சில சொத்துக்களுக்கு மட்டும் விருப்பம் தெரிவித்து இருந்தது.
அதானி குழுமம்
முதலில் அதானி குழுமம் DHFL நிறுவனத்தின் wholesale/slum redevelopment authority (SRA) வர்த்தகத்திற்கு மட்டுமே விருப்பம் தெரிவித்து 2,700 கோடி ரூபாய் அளவிலான தொகையை விருப்பம் தெரிவித்து இருந்தது.
31,250 கோடி ரூபாய்
இந்நிலையில் அதானி குழுமம் திடீரெனச் சனிக்கிழமை DHFL நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக ஓக்ட்ரீ நிறுவனத்தின் 31,000 கோடி ரூபாய் தொகைக்கு 250 கோடி ரூபாய் அதிகத் தொகைக்குக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் கொடுத்து இருந்தது.
DHFL மற்றும் எஸ்பிஐ
அதானி குழுமத்தின் இந்தத் திடீர் விண்ணப்பம் சக போட்டி நிறுவனங்களாகப் பிராமல் மற்றும் ஓக்ட்ரீ இடையில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் பிராமல் மற்றும் ஓக்ட்ரீ ஆகிய நிறுவனங்கள் DHFL மற்றும் எஸ்பிஐக்குக் கடிதம் எழுதியது.
அனைவருக்கும் வாய்ப்பு
அதானி குழுமத்தின் விண்ணப்பம் ஏற்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், இந்த ஏலத்தைத் தடை பெறத் தயங்க மாட்டோம் எனத் தெரிவித்தது. அதானி குழுமத்தின் இந்தத் திடீர் விண்ணப்பம் ஏற்கும் பட்சத்தில் தங்களுக்கு இறுதி விண்ணப்பம் கொடுக்க வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கையும் வைத்துள்ளது.
போட்டி அதிகரிப்பு
அதானி குழுமத்தின் இந்தச் செயலால் அனைத்து நிறுவனங்களுக்கும் புதிதாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும்பாலான நிறுவனங்கள் மொத்த நிறுவனத்தையும் கைப்பற்ற முயற்சி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக