சமீபத்தில் வெளியான தகவலின் படி, நோக்கியா 6300 மற்றும் நோக்கியா 8000 சீரிஸ் பியுச்சர் போன்களை எச்.எம்.டி குளோபல் நோக்கியா நிறுவனம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயன்று வருவதாக கருதப்படுகிறது. வைஃபை கால்லிங் அம்சத்தை ஆதரிக்கும் போன்களின் பட்டியலில், இந்த இரண்டு போன்களின் பெயர்களை டெலியா என்ற கேரியர் நிறுவனம் கண்டது என்ற செய்திகள் பரவி வருகிறது.
4G இணைப்புடன் மீண்டும் வருகிறதா நோக்கியா 6300 மற்றும் நோக்கியா 8000?
நோக்கியா நிறுவனத்தின் இந்த புதிய பியூச்சர் போன்கள் நோக்கியா 3310, நோக்கியா 8110 4 ஜி, நோக்கியா 5310 மற்றும் நோக்கியா 2720 ஃபிளிப் போன்ற முந்தைய ரெஸ்டோர் போன்களின் பட்டியலில் சேர தயாராக இருப்பது போல் தெரிகிறது. இந்த புதிய சாதனங்களின் விவரக்குறிப்புகள் வெளியாகவில்லை, ஆனால் சாதனங்கள் KaiOS இல் இயங்கக்கூடும் என்றும், இவை 4G இணைப்பையும் ஆதரிக்கக்கூடும் என்றும் வதந்திகள் வெளியாகியுள்ளது.
நோக்கியா 8000 & நோக்கியா 6300
நோக்கியா 6300 போன் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், நோக்கியா 8000 என்பது ஒரு மாடலாக இருக்கவில்லை, ஆனால் 8000 தொடரின் கீழ் உள்ள சாதனங்கள் நோக்கியாவால் ஆரம்ப காலங்களிலிருந்து வெளியிடப்பட்டன என்பதில் மட்டும் எந்த சந்தேகமுமில்லை. குறிப்பாக இவை பிரபலமான ஸ்லைடர் வடிவ போன்களாக வெளிவந்தது.
பிரமிக்க வைத்த S40 OS இயங்குதளம்
இவற்றில் சில வகைகள் மெட்டல் கேசிங் உடன் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 6300 பியூச்சர் போனில் 2 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2' இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டிருந்தது. இது S40 OS மூலம் இயங்கியது என்பது அந்த காலக்கட்டத்தில் மிக பெரிய விஷயமாக கருதப்பட்டது.
புது வடிவமைப்பைப் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும்
நோக்கியா மற்ற பழைய மாடல்களுடன் சில மேம்பாடுகளை செய்ததைப் போல, இந்த இரண்டு புதிய மாடல்களுக்கும் சில மேம்பாடுகளை வழங்கினால் இதன் புது வடிவமைப்பைப் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்குமென்று நோக்கிய ரசிகர்கள் கருதுகின்றனர்.
நோக்கியா 8000 சீரிஸ் சாதனங்கள் அந்த காலத்தில், சில தலைசிறந்த பொருட்களால் உருவாக்கப்பட்டது, மேலும் அந்த நாளில் சிறந்த தரம் வாய்ந்த போன் எது?
நோக்கியா எப்போதும் பெஸ்ட் தான்
யாரிடம் கேட்டாலும், அவர்கள் நோக்கியாவின் போன்களை மட்டுமே குறிப்பிட்டு கூறும் வகையில் அதன் தயாரிப்பு இருந்துள்ளது. புதிய பியூச்சர் போனும் அத்தகையானதாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். எச்எம்டி நிறுவனம் இது பற்றி இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக