இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நவம்பர் 7 ஆம் தேதி புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் தயாராக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஏவுதல் நவம்பர் 7ம் தேதி அன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி சி 49 (PSLV C49)
இந்த புதிய செயற்கைக்கோள்களை, பி.எஸ்.எல்.வி சி 49 (PSLV C49) என்ற ராக்கெட் விண்ணிற்கு எடுத்து செல்கிறது. இந்த ராக்கெட் ரிசாட்-2 பிஆர் 2 (RISAT-2BR2) என்ற செயற்கைக்கோளை எடுத்துச் செல்லும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிசாட்-2 பிஆர்2 என்ற EOS-01 மற்றும் ஒன்பது பிற சர்வதேச வணிக செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் நவம்பர் 7ம் தேதி விண்ணிற்கு எடுத்து செல்ல தயாராக உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்வதற்கு தயார்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைகோள்கள் PSLV C49 மூலம் விண்ணில் பாயும், வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு இந்த ஏவுதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. RISAT-2BR2 என்பது ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும். இது அனைத்து வானிலை நிலைகளிலும் படங்களைப் படம்பிடிக்கக்கூடிய சிந்தெடிக் அபேர்ச்சர் ரேடார் (synthetic aperture radar - SAR) கருவியை இது கொண்டுள்ளது.
EOS-01 செயற்கைக்கோள் எதற்காக?
இந்த செயற்கைக்கோள் பகல் மற்றும் இரவு நேரங்களில் படங்களை எடுக்கக்கூடியது மற்றும் இந்த செயற்கைக்கோள் பொதுமக்களின் நடவடிக்கை மற்றும் கண்காணிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. EOS-01 செயற்கைக்கோள் விவசாயம், வனவியல் மற்றும் பேரழிவு மேலாண்மை ஆதரவு ஆகியவற்றில் அதன் பயன்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
51 வது விண்வெளி பணியில் இஸ்ரோ
ஒன்பது பிற சர்வதேச வணிக செயற்கைக்கோள்கள், வாடிக்கையாளரின் செயற்கைக்கோள்கள் விண்வெளித் துறையின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) உடனான வணிக ஒப்பந்தத்தின் கீழ் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ, ஒரு வலைப்பதிவு இடுகையில், "இந்தியாவின் போலார் சாட்டிலைட் லாஞ் வெஹிகிள் (Polar Satellite Launch Vehicle) பிஎஸ்எல்வி-சி 49 தனது 51 வது பணியில் உள்ளது என்று அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம்
ஈஓஎஸ்-01 முதன்மை செயற்கைக்கோளாக அறிமுகப்படுத்தும், மேலும் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) ஷாரில் இருந்து ஒன்பது சர்வதேச வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களை அனுப்பப்படும். நவம்பர் 07 ஆம் தேதி அன்று வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு 15:02 மணிநேர ஐ.எஸ்.டி.யில் இந்த செயற்கைக்கோள் ஏவுதல் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்
EOS-01 என்பது வேளாண்மை, வனவியல் மற்றும் பேரழிவு மேலாண்மை ஆதரவு ஆகியவற்றில் பயன்பாடுகளை நோக்கமாகக் கொண்ட ஒரு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள் விண்வெளித் துறையான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) உடன் வணிக ஒப்பந்தத்தின் கீழ் ஏவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக