Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 பிப்ரவரி, 2021

இதை செய்தால் போதும்... எப்போதும் நமக்கு சந்தோஷம்தான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

--------------------------------------------------------

அமலா : என் மருமகள் ரொம்ப சோம்பேறி.

விமலா : என்ன செய்றா?

அமலா : திடீர்னு சண்டைய நிறுத்திட்டு சமாதானம் ஆயிடுவா.

விமலா : 😄😄

--------------------------------------------------------

பாபு : இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?

கோபு : நான்கு!

பாபு : இல்லை 22

கோபு : 😬😬

--------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா?

--------------------------------------------------------

அதிர்ஷ்டம் இல்லாத நகரம் - லக்னோ

தொங்கவிட முடியாத திரை - குதிரை

வெட்டும் காய் - கத்தரிக்காய்

எப்போதும் சிரிக்கும் பூச்சி - ஈ

உட்கார முடியாத கடை – சாக்கடை

--------------------------------------------------------

இதை செய்தால் போதும்... எப்போதும் நமக்கு சந்தோஷம்தான்...!

--------------------------------------------------------

வாழ்க்கையில இரண்டு விஷயத்தை மட்டும் விட்டுவிட்டால் போதும்...

எப்போதும் நமக்கு சந்தோஷம்தான்...

அடுத்தவங்கக்கூட நம்மை ஒப்பிடுவது...

அடுத்தவங்கக்கிட்ட எதிர்பார்க்குறது...

--------------------------------------------------------

கலைந்துள்ள சொற்களை சீர்படுத்துக...!!

--------------------------------------------------------

1. ர லி நா ம ற் கா

2. ன ஓ ம் வி த மா ள டு

3. ற் உ ப சி ற் ட யி

4. த ந் ம் த ந் ப சொ

5. ம் ப ஆ ர ம் ட

விடை :

1. மரநாற்காலி

2. விமான ஓடுதளம்

3. உடற்பயிற்சி

4. சொந்தபந்தம்

5. ஆடம்பரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக