---------------------------------------------
தெறிக்கும் ஜோக்ஸ்...!!
---------------------------------------------
ரமேஷ் : என்னடா ரொம்ப கவலையா இருக்க?
சுரேஷ் : பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?
ரமேஷ் : ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?
சுரேஷ் : நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா....
ரமேஷ் : 😄😄
---------------------------------------------
பாபு : என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை Dress மாத்துவான்!
கோபு : அது பரவாயில்லை, என் இளைய தம்பி ஒரு நாளைக்கு 6 தடவைகூட Dress மாத்துவான்.
பாபு : நெஜமாவா சொல்ற.. அவனுக்கு என்ன வயசு இருக்கும்?
கோபு : என்ன, பொறந்து 3 மாதம் தான் ஆகுது!
பாபு : 😎😎
---------------------------------------------
ஒரு சொல்... ஒரு மொழி...!!
---------------------------------------------
கை - கரம், உறுப்பு, ஒழுக்கம், சிறிய, திங்கள்
கோ - அரசன், தலைவன், இறைவன், பசு, இடியோசை, ரோமம்
சா - இறப்பு, பேய், பெண்
சீ - இகழ்ச்சி, திருமகள், உறக்கம்
சே - எருது, அழிஞ்சில் மரம்
---------------------------------------------
இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!
---------------------------------------------
கஞ்சி ஊத்த ஆள் இல்லன்னாலும் கட்சி கட்ட ஆளு வேணும்னு கெஞ்சிப் பேச வாஞ்சித்த வஞ்சியை மிஞ்சிய பிஞ்சுநெஞ்சு கொஞ்சியழைத்தது.
உனக்கும் எனக்கும், பிறர்க்கும் உனக்கும், எனக்கும் பிறர்க்கும், அவர்க்கும் நமக்கும், இவர்க்கும் அவர்க்கும், பெரிதான பிரதான ஒற்றுமை மானிடப் பிறவியே.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக