புதன், 23 டிசம்பர், 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டில் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனாலும் சில நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தன. ஆனாலும் இந்த ஆண்டு மிகக் குறைவான ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் போன்களை திருடிய இரண்டு பேர் கைது
செய்யப்பட்டு உள்ளனர். அதாவது கிடங்கில் கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிடங்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குருகிராம் கிடங்கில் இருந்து ஊழியர்கள் மொத்தம் 78 ஸ்மார்ட்போன்களை திருடி உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இருந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 38 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. பின்பு 40 போன்கள் தொடர்ந்து மாயமாக உள்ளது. பின்பு கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் இந்த சம்பவம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. பின்பு அமேசான் நடத்திய ஆய்வில் இரு ஊழியர்கள் மொபைல் போன்களை திருடி சென்று விற்றதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிவந்த தகவலின்படி ஊரடங்குக்கு பின்பு, குருகிராமில் இருக்கும் அமேசான் கிடங்கு சமூக இடைவெளி விதிமுறைகளுடன் மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த சூழ்நிலைiயில் வெளியில் செல்லும்போது அவர்களிடம் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்று சரிபார்க்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, இருவரும் மொபைல் ஃபோன்களை திருடத் தொடங்கியுள்ளனர். இரண்டு மாதங்களில், குற்றம் சாட்டப்பட்ட அமேசான் ஊழியர்கள் 78 தொலைபேசிகளை ஒரே மாதிரியாக திருடியதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக