Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 டிசம்பர், 2020

பிசாசு 2 படத்தின் first look-க்கும் Andrea-வுக்கும் இப்படி ஒரு connection இருக்கா?

 பிசாசு 2 படத்தின் first look-க்கும் Andrea-வுக்கும் இப்படி ஒரு connection இருக்கா?

நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்த நாளில் இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டார்.

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடிக்கிறார். இது 2014 ஆம் ஆண்டில் வெளிவந்து வெற்றிபெற்ற பிசாசு படத்தின் தொடர்ச்சியாகும். நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்த நாளில் இயக்குனர் அவரது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது

இப்படத்தில் ஆண்ட்ரியாவின் தோற்றம் அவர் 2015 இல் தனது சமூக ஊடக அகௌண்டில் பகிர்ந்த ஒரு புகைப்படத்தைப் போலவே இருந்தது என்பது பின்னர் கண்டறியப்பட்டது. ஆண்ட்ரியா பகிர்ந்த அந்த படம் அவரது தாய்வழி பாட்டி ஹீதருடையது என்றும் அந்த படம்தான் பிசாசு 2 படத்தில் தனது தோற்றத்தை இந்த வகையில் வடிவமைக்க மிஷ்கினுக்கு (Mysskin) ஊக்கமளித்தது என்றும் கூறினார்.

பின்னால் ஒரு கதை இருக்கிறது ... இடதுபுறத்தில் என் தாய்வழி பாட்டியின் படம் உள்ளது. அவர் ஒரு இளம் பெண்ணாக இருந்தபோது அது எடுக்கப்பட்டது. அவரது பெயர் ஹீதர். அவருக்கு ஆழமான பொன்னிற முடியும் சாம்பல் நீலக் கண்களும் இருந்தன. அவர் இப்பகுதியைச் சேர்ந்தவரைப் போலவே இருக்க மாட்டார்.

இயக்குனர் மிஷ்கின் முதன்முதலில் படத்தின் கதையை என்னிடம் விவரித்தபோது, ​​நான் உடனடியாக அந்த கதாபாத்திரத்திற்கும் எனது சொந்த குடும்ப பரம்பரைக்கும் இடையிலான ஒற்றுமையைப் பற்றி சிந்தித்தேன். நான் இந்த பழைய புகைப்படங்களைத் தேடி கண்டுபிடித்து அவருக்கு அனுப்பினேன்.

இந்த புகைப்படம் ஒரு வித்தியாசமான வினோத அழகைக் கொண்டிருப்பதாகவும், தனது படத்தில் எனது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்த படத்தின் அடிப்படையில் உருவாக்க விரும்புவதாகவும் மிஷ்கின் தெரிவித்தார். அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். எனக்கு இந்த படம் குறித்து முன்னும் பதட்டமாக இருந்தது, இப்போதும் அப்படித்தான் உள்ளது. ஆனால் இந்த ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்தபோது, ​​எனக்கு ஒரு வகை அமைதி கிடைத்துள்ளது. ஏனென்றால் நான் அந்த கதாப்பாத்திரத்தைக் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். இந்த தோற்றத்தை மிகவும் அழகாக மீண்டும் உருவாக்கிய குழுவுக்கு நன்றி! நான் அணிந்திருக்கும் ஸ்கார்ஃப் என் பாட்டியின் ஸ்கார்ஃப். அதுவே என் அதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம்!!” என்று எழுதியுள்ளார்.

பிசாசு 2 (Pisasu 2) படத்திற்கான ஆண்ட்ரியாவின் (Andrea) ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளிவர ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக