Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 டிசம்பர், 2020

ஜனவரி முதல் LPG சிலிண்டரின் விலை வாரம் வாரம் நிர்ணயிக்கப்படும்!

OMG..! ஜனவரி முதல் LPG சிலிண்டரின் விலை வாரம் வாரம் நிர்ணயிக்கப்படும்!

புத்தாண்டு முதல் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை அல்ல ஒவ்வொரு வாரமும் திருத்தப்படும்..!

நாட்டில் LPG சிலிண்டரின் விலை அடுத்த ஆண்டிலிருந்து வாரம் வாரம் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த விலைகள் மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, ஆனால் இப்போது எண்ணெய் நிறுவனங்கள் (Oil companies) வாராந்திர அடிப்படையில் விலைகளை மாற்ற திட்டமிட்டுள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலையில் தினசரி ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பெட்ரோலிய நிறுவனங்கள் இப்போது வாரத்திற்கு ஒரு முறை விலைகளை மாற்றுவதற்கான வழிகளை பரிசீலித்து வருகின்றன.

LPG விலை மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுகிறது:

இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் திருத்தப்படுகின்றன. இதன் விளைவாக எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. பெட்ரோலிய நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் அதை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றப்பட்டால், ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன. கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிற பொருட்களைச் சேர்த்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

ஆனால், LPG சிலிண்டரின் (LPG Gas cylinder) விலையை மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிப்பதன் மூலம், நிறுவனங்கள் முழு மாதத்திற்கும் இழப்பைச் சுமக்க வேண்டியிருக்கும். இந்த பின்னணியில், பெட்ரோலிய நிறுவனங்கள் விலைகளை மாற்றுவது குறித்து நீண்டகாலமாக ஆலோசனை செய்து வருக்கின்றனர். 

டிசம்பரில் மட்டும் இரண்டு முறை விலை உயர்வு:

நிபுணர்களின் கூற்றுப்படி, பெட்ரோலிய நிறுவனங்களும் விலைகளை உயர்த்தும் புதிய கொள்கையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால் இதுவரை எந்த விதமான அதிகாப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் கீழ், எல்பிஜி சிலிண்டரின் விலை டிசம்பரில் இதுவரை இரண்டு முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிப்பு இல்லாததால், மக்கள் அதை அறிந்து கொள்ள முடியவில்லை.

IOC-யின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, டிசம்பர் 2 ஆம் தேதி LPG சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, டெல்லியில் LPG விலை ரூ.644 ஆக இருந்தது. பின்னர், டிசம்பர் 15 ஆம் தேதி மீண்டும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. 
விலை உயர்வுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள இந்தேனின் எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது ரூ.664 ஆகும். அதே நேரத்தில், பெட்ரோலிய நிறுவனங்கள் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை டிசம்பர் 1 அன்று ரூ.55 ஆக உயர்த்தியுள்ளன.

எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் அதிகரிப்பு ஆகியவை சந்தையில் சமத்துவத்தையும் மானிய விலையையும் கொண்டுவந்ததால் இந்த ஆண்டு செப்டம்பரில் சமையல் எரிவாயு மானியங்களை அரசாங்கம் நீக்கியது. இப்போது சந்தை விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசாங்கம் மானிய சலுகைகளையும் அதிகரிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக