காரின் விண்டு ஷீல்டில் (Windshield) விரிசல் ஏற்பட்டால், கார் உரிமையாளருக்கு அது பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடும். எனவே விண்டு ஷீல்டில் ஏன் விரிசல் ஏற்படுகிறது? என்பதற்கான முக்கிய காரணங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இதன்மூலம் கார் உரிமையாளர்கள், தங்கள் காரின் விண்டு ஷீல்டில் விரிசல் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
சரளை சாலைகள்
பெயர்ந்து கிடக்கும் மோசமான சாலைகளில் பயணிக்கும்போது, சரளை கற்கள் பறந்து வந்து, காரின் விண்டு ஷீல்டில் விரிசலை ஏற்படுத்தி விடும் வாய்ப்புகள் அதிகம். எனவே சரளை கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலைகளில் பயணிக்கையில், மற்ற வாகனங்களில் இருந்து சற்று இடைவெளியை கடைபிடிக்கலாம்.
கட்டுமான வாகனங்கள்
கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் பின்னால் பயணிப்பதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், கட்டுமான வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பொருட்கள் வந்து விழுந்து, விண்டு ஷீல்டில் விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
தரமற்ற வகையில் பொருத்துதல்
விண்டு ஷீல்டு முறையாக பொருத்தப்படாமல் இருந்தாலோ அல்லது உங்கள் காரின் ப்ரேம் உடன் சரியாக பொருந்தி போகாமல் இருந்தாலோ, ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அதிவேகத்தில் பயணிக்கும்போது ப்ரேமில் ஏற்படும் அதிர்வுகளால், விண்டு ஷீல்டு உடைந்து விடக்கூடும்.
வெப்பநிலை மாற்றங்கள்
அதிகபட்ச வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பநிலையில் இருந்து திடீரென வெப்பநிலை குறைந்து குளிரான சூழல் ஏற்படுவது என திடீரென ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கண்ணாடியில் அழுத்தத்தை உண்டாக்கி, விண்டு ஷீல்டு விரிசல் அடைய காரணமாகி விடும்.
எனவே உங்கள் பகுதியில் வெப்பநிலையை அறிந்து கொண்டு, டிஃப்ரோஸ்டரை (defroster) மெதுவாக வார்ம் அப் செய்யுங்கள். இதுதவிர விண்டு ஷீல்டு சேதம் அடைவதை தவிர்க்க, நேரடியாக சூரிய ஒளி படும் பகுதிகளில், காரை பார்க்கிங் செய்வதை தவிர்க்கலாம்.
மரங்களுக்கு அடியில் பார்க்கிங் செய்வது
ஒரு சிலர் மரங்களுக்கு அடியில் காரை பார்க்கிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த சமயங்களில், மரங்களில் இருந்து விழும் ஏதேனும் ஒரு பொருள், விண்டு ஷீல்டில் சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே காரை பாதுகாப்பாக கேரேஜில் பார்க்கிங் செய்வதே நல்லது.
மோசமான கண்ணாடி
உங்களின் காரின் விண்டு ஷீல்டு, தரம் குறைந்த கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருந்தால், சிறிய அழுத்தம் ஏற்பட்டால் கூட உடைந்து விடும் அபாயம் உள்ளது. எனவே நல்ல தரமான கண்ணாடியை ரீப்ளேஸ் செய்து கொள்வது சிறந்தது.
அப்பார்ட்மெண்டில் வசிப்பவரா நீங்கள்?
அதிகப்படியான குழந்தைகள் நிறைந்த அப்பார்ட்மெண்ட்களில் வசிப்பவர்களின் விண்டு ஷீல்டு உடைந்து விடும் அபாயம் அதிகம். ஏனெனில் அங்கு குழந்தைகள் விளையாடும் பந்து வந்து விழுந்து, விண்டு ஷீல்டு உடைந்து விடக்கூடும். எனவே காரை பாதுகாப்பாக கேரேஜில் பார்க்கிங் செய்வதே மிகச்சிறந்தது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக