Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 28 டிசம்பர், 2020

ரூ.20000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள்.!

 இந்தியா போன்ற நாடுகளில் கேமிங்

சியோமி, மோட்டோரோலா, ரியல்மி போன்ற நிறுவனங்களின் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஆன்லைன் கேம்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், எனவே இதற்குவேண்டி தனித்துவமான மென்பொருள் வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை உருவாக்குகின்றன சில நிறுவனங்கள்.

சீனா, இந்தியா போன்ற நாடுகளில் கேமிங் ஸ்மார்ட்போன்கள் தான் அதிகமாக விற்பனை செய்ய்படுகின்றன. மேலும் ஒன்பிளஸ் நிறுவனமும் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளன, ஆனால் அவற்றின் சற்று உயர்வாக இருக்கிறது. இப்போது ரூ.20000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்3

கேமிங் வசதிகளுக்கு என்றே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் தான் போக்கோ எக்ஸ்3. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதன்படி 6.67-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 x 2340 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். 6000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட அசத்தலான அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

கேமராக்களைப் பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன், 13 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் மற்றும் முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 20 மெகாபிக்சல் கேமராவைக் POCO X3 NFC கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,999-ஆக உள்ளது.

மோட்டோ ஜி 5ஜி

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே கேமிங் பயன்பாடுகளுக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.20,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

ரியல்மி எக்ஸ்2

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும். ரியல்மி எக்ஸ்2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 420 நிட் வரை பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் உடன் இயங்குகிறது. குறிப்பாக ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் ப்ளூ மற்றும் ஃப்யூஷன் பிளாக் நிங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூட்டின் கீழ், எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, இது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SoC பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஒரு ப்ராசஸர் ஆகும். ,இது ஒரு சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 4கே வீடியோ பதிவுகளையும் ஆதரிக்கிறது. செல்பீக்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இதுவும் லைவ் போகஸ் ஆதரவுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரிபொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.15,499-ஆக உள்ளது.

Xiaomi ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ்

6.67' இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் 120 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதமும் உள்ளது

பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி

6 ஜிபி அல்லது 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்

128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பு

பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட்

குவாட் ரியர் கேமரா அமைப்பு

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா

5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா

2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்

32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

33W பாஸ்ட் சார்ஜிங்

5,020 எம்ஏஎச் பேட்டரி

நிறம்: இன்டர்ஸ்டெல்லர் பிளாக், கிளேசியார் வைட் மற்றும் அரோரா ப்ளூ விலை ரூ.16,989

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக