Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

2021.. ஆங்கில வருட ராசிபலன்கள் - பாகம் 09

மற்றவர்களை கவரும் வண்ணம் கனிவாக பேசும் திறன் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!!

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் பலிதமாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தன்னம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

 

பொருளாதாரம் :

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். பல துறைகளை பற்றிய அறிவும், தேடலும் மேம்படும்.

 

ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வப்போது சளி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

 

திருமணம் :

திருமணம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், ஆரோக்கியமான விவாதமும் ஏற்பட்டு மறையும்.

 

மாணவர்கள் :

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீர்நிலை சார்ந்த விளையாட்டுகளில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்று மகிழ்வீர்கள். அயல்நாடு தொடர்பான பயணம் மற்றும் விசாவில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் நண்பர்களின் உதவிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான வேலைகளில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

 

வியாபாரிகள் :

தொழில் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதை வெற்றி கொள்வதற்கான சூழ்நிலையும், அதிலிருந்து புதிய அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

அரசியல்வாதிகள் :

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிர்பாராத விதமாக வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களால் புதுவிதமான அனுபவமும், உற்சாகமும் கிடைக்கும்.

 

கலைஞர்கள் :

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதியதொரு மாற்றமும், ஆரோக்கியமான சூழ்நிலைகளும் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.

 

நன்மைகள் :

மனதில் இருக்கும் எண்ணங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் எண்ணிய இலக்கை அடைந்து, பாராட்டுகளை பெற்று, முன்னேற்றத்தை உருவாக்கிக்கொள்ள இருக்கக்கூடிய ரிஷப ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.

 

கவனம் :

கடன் தொடர்பான செயல்பாடுகளிலும், விதண்டாவாதங்களிலும் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களின் மூலம் கையிருப்பு குறைந்து நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும்.

 

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வர முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக