👉 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் சுக்கிரன் நட்பு என்னும் நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
👉 சமுதாயத்தில் மதிப்பு உடையவர்கள்.
👉 பூர்வீக சொத்துக்களை உடையவர்கள்.
👉 குடும்ப பெரியோர்களின் ஆசிகளை உடையவர்கள்.
👉 மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கக்கூடியவர்கள்.
👉 திருத்தல பணிகளை முன்னின்று செய்து மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள்.
👉 அரசு சம்பந்தமான ஏதாவது ஒரு துறையில் பதவி வகிக்கக்கூடியவர்கள்.
👉 சுயநலம் இன்றி பொதுநலத்தோடு பணியாற்ற கூடியவர்கள்.
👉 தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.
👉 வேதம் பயிலுதல் மற்றும் மந்திர உபதேசங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
👉 இனிமையான வார்த்தைகள் மூலம் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.
👉 எந்நிலையிலும் தன்னிலை மறவாதவர்கள்.
👉 ஈகை குணம் உடையவர்கள்.
👉 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்படக்கூடியவர்கள்.
👉 தன்னை எதிர்ப்பவர்களை நேரம் பார்த்து சரியான பதிலடிகளை அளித்து எதிரிகளை தன் வசப்படுத்தக்கூடியவர்கள்.
👉 பிள்ளைகள் மேல் அன்பும், பாசமும் உடையவர்கள்.
👉 எந்த செயல் செய்தாலும் அதை பற்றி நன்கு சிந்தித்து தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படக்கூடியவர்கள்.
👉 தோல்வியை விரும்பாதவர்கள். தொடர்ந்து போராடி தோல்வி அடைந்த இடத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்னும் வைராக்கியம் கொண்டவர்கள்.
👉 குடும்ப கௌரவத்தையும், பாரம்பரிய செயல்களையும் விடடுக்கொடுக்காதவர்கள்.
👉 முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணங்களை சரியான நேரங்களில் செய்யக்கூடியவர்கள்.
👉 தொழில் திறமையும், பொருள் சேர்க்கும் வளமையும் உடையவர்கள்.
👉 எவரும் அறியாத சில மறைமுக ரகசியங்களை உடையவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக