------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்.....!
------------------------------------------------
ஆசிரியர் : டேய்.. ஓடாதே.. நில்லு..
மாணவன் : எதுக்கு சார்?
ஆசிரியர் : எதுக்கு இவளை தூக்கிட்டு ஓடுற?
மாணவன் : நீங்கதானே சார் சொன்னீங்க. விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால, ஜோதியை தூக்கிட்டு ஓடணும்னு....
ஆசிரியர் : 😣😣
------------------------------------------------
டாக்டர் : நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் டயலாக் சொல்லு?
நர்ஸ் : கூட்டிட்டு வாங்க.. தூக்கிட்டு போங்க..
டாக்டர் : 😄😄
------------------------------------------------
அப்பா : டேய்.. எனக்கு தெரியாம எப்படி நீ கல்யாணம் செய்யலாம்?
மகன் : நீ மட்டும் எங்கம்மாவை எங்கிட்ட சொல்லிட்டா கல்யாணம் பண்ணிக்கிட்ட.
அப்பா : 😐😐
------------------------------------------------
உடல்நல குறிப்புகள்.....!
------------------------------------------------
1. சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்து மோரில் கலந்து தினந்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினந்தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயத்தைப் அரைத்து தினந்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
4. செம்பருத்தி பூவை காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போல தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
------------------------------------------------
சான்றோர் மொழிகள்...!!
------------------------------------------------
முதல் தெய்வம் - பெற்றோர்...
மிகமிக நல்ல நாள் - இன்று...
மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு...
மிகவும் வேண்டாதது - வெறுப்பு...
மிகவும் தேவை - புத்திசாலித்தனம்...
மிகக்கொடிய நோய் - பேராசை...
நம்பக்கூடாதது - வதந்தி...
செய்யக்கூடாதது - துரோகம்...
செய்யவேண்டியது - உதவி...
பிரியக்கூடாதது - நட்பு...
மறக்கக்கூடாதது - நன்றி...
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக