மோட்டோ ஜி ப்ளே (2021) கூகிள் பிளே கன்சோல் பட்டியலில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதில் சில விவரக்குறிப்புகள் மற்றும் ஸ்மார்ட்போனின் முன்பக்க டிசைனும் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த கட்டத்தில் இது மோட்டோ ஜி ப்ளேயின் (2021) படமா அல்லது ஒரு மாதிரியின் டிசைன் வடிவமைப்பா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த மாதம் கீக்பெஞ்ச் பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்கோரிங்கிற்காக காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 460 SoC இருப்பதையும் பரிந்துரைத்துள்ளது.
டிப்ஸ்டர் 'TTTechinical' இன் டிவீட்டின் படி , மோட்டோ ஜி ப்ளே (2021) என்ற ஸ்மார்ட்போன் கூகிள் பிளே கன்சோலில் சில விவரக்குறிப்புகள் மற்றும் ஒரு முன்பக்க படத்துடன் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் (SM4350) மற்றும் அட்ரினோ 610 ஜி.பீ.யூ ஆகியவற்றால் இயக்கப்படுகிறது, மேலும் 3 ஜிபி ரேம் அல்லது அதற்கு மேலான ஒரு மாறுபாட்டைக் கொண்ட வேரியண்ட்டாக வெளிவர வாய்ப்புள்ளது.
இது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி ப்ளே (2021) 720x1,600 பிக்சல்கள் டிஸ்பிளே 280ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. 6.5' இன்ச் டிஸ்பிளேவுடன் இது வெளிவரலாம் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. செல்பி கேமராவிற்கான நாட்ச் டிஸ்பிளேவும் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இது சிங்கிள் கோர் மையத்தில் 253 மற்றும் மல்டி கோர் சோதனைகளில் 1,233 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக