பீஹார் மாநில காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில் பல குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணிக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
காவல்துறை நடத்திய நான்கு மணி நேர தீவிர கண்கானிப்பில் முன்னதாக களவு செய்யப்பட்ட கார்கள் மற்றும் குற்ற வழக்கு பின்னணி கொண்ட நபர்கள் பலரை போலீஸார்கள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிபட்டிருக்கும் குற்றவாளிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையைப் போன்று காட்சியளிக்கின்றது.
ஆனால், வட மாநிலங்களில் ஒன்றான பீஹாரில் மட்டுமே இச்சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. இங்கே 4 மணி நேரம் நடந்த தீவிர கண்கானிப்பில் 65 குற்றவாளிகள் மற்றும் 67 திருடப்பட்ட வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பீஹார் காவல்துறையின் இந்த தீவிர பரிசோதனை அம்மாநில குற்றவாளிகளை நடு-நடுங்க செய்திருக்கின்றது.
தற்போது பிடிபட்டிருக்கும் குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு குற்றங்களின்கீழ் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர். இதுமட்டுமின்றி, கடத்தல், வழிபறி, கொள்ளை போன்ற சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே நடத்தப்பட்ட பரிசோதனையில் இத்தனை வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை காவல்துறை பிடித்திருக்கின்றதா?, என்ற கேள்வியும், ஆச்சரியமும் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது. மேலும், போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், "சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 3,570 லிட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் 159 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர 92,000 ரூபாய் ரொக்கத்தையும் குற்றவாளிகளிடத்தில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
பீஹார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் அதிரடியாக நடத்தப்பட்ட தீவிர சோதனையிலேயே இவையனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற தீவிர கண்கானிப்பு நம் மாநிலங்களிலும் நடைபெறாதா என பிற மாநில வாசிகளை இச்சம்பவம் ஏங்க வைத்திருக்கின்றது. குறிப்பாக, வாகனங்களைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கும் உரிமையாளர்கள் மத்தியில் இந்த ஏக்கத்தைக் காண முடிகின்றது.
தொழில்நுட்பம் மற்றும் தீவிர பரிசோதனை உள்ளிட்டவை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும் வாகன திருட்டு மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே எத்தகைய யுக்தியைக் கையாண்டால் தலைவலியை ஏற்படுத்தி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை பீஹார் காவல்துறை விளக்கியிருக்கின்றது.
அதேசமயம், பிற மாநிலங்களில் திருடப்பட்ட வாகனங்களை மீட்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டாலும் திருடர்களின் விநோத யுக்தி காவல்துறையினரை அதிக அலைக்கழிப்பிற்கு ஆளாக்குகின்றது. சிசிடிவி கேமிரா இல்லாதது மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றால் வாகனத்தை மீட்பதில் தொய்வு ஏற்படுகின்றது.
இதுபோன்ற அவல நிலையை கலையவே ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் கருவிகளைப் பயன்படுத்துமாறு வாகனத்துறை வல்லுநர்களும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றைப் பொருத்துவதன் மூலம் திருடப்படும் வாகனங்களை மிக எளிதில் மீட்க முடியும். குறிப்பாக, வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது, எந்த பகுதியை நோக்கி பயணிக்கின்றது என அனைத்து தகவல்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக