இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய ஒப்பந்தமாகக் கருதப்படும் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் டீலில் அமேசான் தலையிடுவதைத் தடுக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. இதனால் 3 நிறுவனங்கள் மத்தியிலான பிரச்சனை மீண்டும் தொடரும் எனத் தெரிகிறது.
அமேசான் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வென்ற நிலையில், இந்தியாவில் செபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு அமேசான்.காம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கடிதம் அனுப்பி வருகிறது
கிஷோர் பியானி-யின் வழக்கு
பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்கள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும் என அமேசான் செபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பியூச்சர் குரூப்-ன் தலைவர் கிஷோர் பியானி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமேசான் இந்த ஒப்பந்தத்திற்கு இடையூறாக இருப்பதைத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடுத்தது.
டெல்லி உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் டீலில் அமேசான் தலையிடுவதைத் தடுக்க முடியாது. அமேசான் கோரிக்கையை ஏற்று தத்தம் அமைப்புகள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு முடிவுகளை எடுக்க முழு உரிமை உண்டு என அறிவித்தனர்.
அமேசான் நடவடிக்கைகள்
சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் அமேசானின் வழக்கிற்குச் சாதகமான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து அமேசான், இந்தியாவில் இருக்கும் பல்வேறு வர்த்தக அமைப்புகளுக்குப் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்கள்
இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தனது தரப்புக் காரணங்களைத் தெரிவித்தது.
அமேசான் தரப்புக் காரணங்கள்
பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் அமேசான் முதலீடு செய்து சுமார் 49 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. இந்த 49% பங்குகள் மூலம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் மறைமுகமாகச் சுமார் 9.82 சதவீத பங்குகளை அமேசான் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதேபோல் அமேசான் - பியூச்சர் கூப்பன்ஸ் இடையிலான ஒப்பந்தத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ள 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமும் இருக்கிறது.
இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் மீறி பியூச்சர் குரூப் தனது நிறுவனத்தை விற்பனை செய்துள்ளது என்பது அமேசான் வாதம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக