சமீப காலத்தில் கொரோனா காரணமாக சில பலன்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பெற்று வருகின்றன எனலாம்.
ஏனெனில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பலரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆக இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வேலை செய்ய டேட்டாகளை அதிகம் பயன்படுத்தினர்.
இதே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் தங்களது ஆன்லைன் வகுப்புகளுக்கு, அதிகம் டேட்டாக்களையும், வாய்ஸ் கால்களையும் பயன்படுத்தினர். ஆக இதனால் கொரோனா காலகட்டத்தில் பலன் அடைந்த துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று எனலாம்.
பல திட்டங்கள்
எனினும் அதிகரித்து வரும் போட்டி, செலவினங்கள், தொழில்நுட்பம் என பலவற்றினால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில நிறுவனங்கள் தங்களது கட்டண விகிதங்களை பார்த்து பார்த்து அதிகரித்து வருகின்றன. கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டும். அதே நேரம் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மற்றவர்களை விட தாங்களும் சிறந்தவர்கள் என காட்டிக் கொள்ள வேண்டும். இப்படி பலவற்றையும் கருத்தில் கொண்டு பல அம்சங்களை கொண்ட திட்டங்களை அறிவித்து வருகின்றன.
பிஎஸ்என்எல் என்ன சலுகை?
அந்த வகையில் தற்போது பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவமான பிஎஸ்என்எல் மிகப்பெரிய சலுகை திட்டத்தினை அறிவித்துள்ளது. சொல்லப்போனால் தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் கூட, இப்படி திட்டத்தினை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி வாருங்கள் அப்படி என்ன தான் சலுகையை கொண்டுள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.
பிஎஸ்என்எல் ஆஃபர் திட்டங்கள்
பிஎஸ்என்எல் 251 ரூபாய் என்ற புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தவிர கூடுதலாக, நிறுவனம் 56 ரூபாய் மற்றும் 151 ரூபாய் என்ற திட்டங்களையும் வழங்குகிறது. இதில் 56 ரூபாய் திட்டத்தில் 10 நாட்களுக்கு 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதே 151 ரூபாய் STV பேக்கில் 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 251 ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டம் 28 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
BSNL Vs ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது 151 ரூபாய் மற்றும் 201 ரூபாய், மற்றும் 251 ரூபாய்களில் மூன்று Work From Home திட்டங்களை வழங்கி வருகின்றது. இதில் முறையே 151 ரூபாய் திட்டத்தில் 30 ஜிபி டேட்டாவும், 201 ரூபாய் திட்டத்தில் 40 ஜிபி டேட்டாவும் மற்றும் 251 ரூபாய் திட்டத்தில் 50 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டிகள் 30 நாட்களாகும். ஆனால் இதே பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லில் இதே 251 ரூபாய் திட்டத்தில் 70 ஜிபி டேட்டா வரை வழங்கப்படுகிறது.
BSNL Vs எர்டெல்
இதே ஏர்டெல்லும் 251 திட்டத்தினை வழங்குகிறது. இது 4ஜி டேட்டாவாகும். இந்த திட்டத்தின் மூலம் 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் வேலிடிட்டி என்பது கிடையாது. உங்களது தற்போதைய பேக் முடிவடையும் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றோரு 401 ரூபாய் திட்டமும் உள்ளது. இதில் 30ஜிபி டேட்டாவோடு, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. எனினும் இது 28 நாட்கள் வேலிட்டிட்டியை கொண்டது.
இது தவிர ஏர்டெல் 48 ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் திட்டத்தினையும் வழங்குகிறது. இதன் மூலம் 3 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
BSNL Vs வீ
Vi (வோடபோன்-ஐடியா) 251 ரூபாய் மதிப்பிலான திட்டத்தின் மூலம் 50 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். இது ஒரு 4ஜி டேட்டா திட்டமாகும். இது தவிர 351 ரூபாய் திட்டத்தினையும் கொண்டுள்ளது. இதில் உங்களுக்கு 100 ஜிபி டேட்டா கிடைக்கும். இது 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக