பிரபுதேவா நடிப்பில் அடுத்து உருவாகக் காத்திருக்கும் பேய் படம் ஒன்றில் நான்கு கதாநாயகிகளுள் ஒருவராக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகம் இருந்தாலும் பிரபுதேவா தற்போது தனது நடிப்புத் திறனில் முழு அக்கறை செலுத்தி வருகிறாராம். தேவி படத்தின் வெற்றிக்குப் பின் பேய் படங்கள் மீதான நம்பிக்கை இருப்பதால் புதிதாக ஒரு பேய் படம் ஒன்றில் பிரபுதேவா நடிக்கிறார்.
இந்தப் படத்தை யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டிகே இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடி சேர நான்கு நாயகிகள் உள்ளனராம். அதில் முதல் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற மூவர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமாம். திருமணத்துக்குப் பின் காஜல் தனது நடிப்பை நிறுத்திவிடுவார் என்றே பேசப்பட்ட போதும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் புதிதாக கமிட் ஆகிவருகிறார் காஜல். அத்தனை கமிட்மென்ட்களுக்கும் கணவர் கிட்சுலு உடன் வருகிறாராம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக