இன்ஸ்டாகிராம் உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்குச் செயல்படாமல் முட்டிலுமாக செயலிழந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த கோளாறு தற்பொழுது உலகெங்கிலும் உள்ள பல பயனர்களால் புகார் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிக்கல் சில பயனர்களுக்கு மட்டும் எழுந்துள்ளது போல் தெரிகிறது, இன்னும் சில பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் வேலை செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலிழப்பு
இன்ஸ்டாகிராம் பயனர்கள் டிவிட்டர் மற்றும் பிற சமூக தளங்களுக்குச் சென்று செயலிழப்பு பற்றி புகார் அளிக்க துவங்கியுள்ளனர், கூகிள் இந்த வாரம் செயலிழந்ததைத் தொடர்ந்து தற்பொழுது இன்ஸ்டாகிராமும் செயலிழந்துள்ளது. #Instagramdown என்ற ஹேஷ்டேக் இப்போது ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. மேலும் பல ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் பயன்பாடு செயலிழந்துவிட்டதாகப் புகார் அளித்துள்ளனர்
டிவிட்டர் தளத்தில் புகார்
இருப்பினும் இன்னும் சிலர் இன்ஸ்டாகிராம் சிறப்பாகச் செயல்படுவதாக டிவிட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். டிவிட்டரில் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை செயலிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரபலமாகி வரும் ஹேஷ்டேக், இது ஒரு பரவலான பிரச்சினை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
சர்வர் டவுன் ஆகிவிட்டதா?
டவுன் (down) டெடெக்டரில் உள்ள வலைத்தள நிலை கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராமின் சிக்கல்கள் வெள்ளிக்கிழமை சுமார் 5 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணிக்கு உயர்ந்ததாகத் தெரிகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உடன் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் போன்ற பிற பேஸ்புக் தயாரிப்புகளும் இந்த மாத தொடக்கத்தில் சற்று டவுன் ஆகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
லிஸ்டில் இது புதுசு..
இந்த செயலிழப்பு பெரும்பாலும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் பதிவாகியுள்ளது, இருப்பினும் இது வளர்ந்து மற்ற பகுதிகளிலும் பாதித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் இந்த வாரம் செயலிழப்புகளை எதிர்கொண்ட பல பிரபலமான நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது. வாரத்தின் தொடக்கத்தில் கூகிள் செயலிழப்பை நாம் கண்டோம், வியாழக்கிழமை நெட்ஃபிக்ஸ், டெலிகிராம் ஆஃப்லைன் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக