ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது, வழக்கத்தைவிட இந்த ஆண்டு மக்கள் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை வாங்கியுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. அதுவும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 21 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு 42% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை வளர்ச்சி
இந்த அறிக்கை சர்வதேச தரவுக் கழகம் (ஐடிசி) என்ற இந்தியவின் மாதாந்திர ஸ்மார்ட்போன் டிராக்கரால் நடத்தப்பட்டுள்ளது. டிராக்கரின் கூற்றுப்படி, இந்த வளர்ச்சி முக்கியமாகப் பல ஆன்லைன் விற்பனை விழாக்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டின் 3 வது காலாண்டில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையைத் தொட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
23 மில்லியன் ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்பனை
செப்டம்பர் 2020 இல் 23 மில்லியன் ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்பனையானதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் 2வது அதிகபட்ச எண்ணிக்கையாக 21 மில்லியன் ஸ்மார்ட்போன் யூனிட்டுகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆன்லைன் சேனல்கள் வழியாக சுமார் 51% பங்குகளின் வளர்ச்சி நடைபெற்றுள்ளது. ஆஃப்லைன் சேனல்கள் வழியாக 33% வளர்ச்சி நடைபெற்றுள்ளது.
டாப்பில் விற்பனை செய்த நிறுவனம் இது தான்..
சியோமி, விவோ மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் மிட்ரேஞ்ச் பிரிவில் ரெட்மி 9, நோட் 9 மற்றும் விவோ ஒய் 20 உடன் விற்பனையில் சிறந்த மாடல்களாக முன்னிலை வகித்துள்ளது. இந்த பிரிவு 60% வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிரீமியம் பிரிவில் ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11 மற்றும் ஒன்பிளஸ் 8 ஆகியவற்றின் உயர் ஏற்றுமதிகளுடன் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது குறிப்பாக மலிவு திட்டங்கள் மற்றும் சலுகையினால் அதிகரித்துள்ளது.
முதல் 5 விற்பனையாளர்கள்
சியோமி நம்பர் 1 உற்பத்தியாளராகவும், சாம்சங், விவோ, ரியல்மே மற்றும் ஒப்போவும் அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் முதல் 5 விற்பனையாளர்கள் என்ற இடத்தை பிடித்துள்ளது. நகர அளவில், அக்டோபர் மாதத்தில் 22 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையானது, தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் நுகர்வோர் வாங்குதல்களால் 38% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
50% க்கும் அதிகமான வளர்ச்சி
புது தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை அக்டோபரில் 50% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜெய்ப்பூர், குர்கான், சண்டிகர், லக்னோ, போபால் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களும் 50% வளர்ச்சியை கண்டுள்ளது.
பட்டையை கிளப்பும் ஸ்மார்ட்போன் பிசினஸ்
எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியைக் காணக்கூடிய சிறந்த நகரங்களின் அடுத்த தொகுப்பாக இன்னும் சில நகரங்கள் பட்டியலில் உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை பட்டையை கிளப்புகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக