கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் அமல் செய்யப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, இந்த ஆண்டு சினிமா துறை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் மற்றும் திரையரங்குகளை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளதால், முடங்கி போன தமிழ் சினிமா (Tamil Cinema) துறை மீதும் செயல்படத் தொடங்கியுள்ளன. அதுவும் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒரு பக்கம் விஜய்யின் "மாஸ்டர்" (Master) மறுபக்கம் அஜித்தின் "வலிமை".(Valimai)
தல அஜித்தின் "வலிமை" படத்தை குறித்து அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு அல்லது போஸ்டர் எதுவும் வெளியிடப்படாததால், தல அஜித் ரசிகர்களின் (Ajith Fans) நிலைமை மோசமானது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால், ரசிகர்கள் வலிமை (Valimai) படத்தை குறித்து தகவலை அறிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், "வலிமை" படத்தின் மோஷன் போஸ்டர் (Valimai Motion Poster) புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படும். :வலிமை" படத்தின் தயாரிப்பாளர்கள் 2021 ஐ பெரிய அளவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தொடர்ச்சியான படத்தை பற்றிய செய்திகள் வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ரசிகர்கள் ஏற்கனவே #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாட்டத்தைத் தொடங்கி உள்ளனர. சமீபத்தில், அஜித்தின் பிஆர் குழு "வலிமை" தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பை அனுப்பியது மற்றும் மேலும் செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டது.
இருப்பினும், "வலிமை" மோஷன் போஸ்டர் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம். நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத் தான் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக