கொரோனாவின் காரணமாக காற்று வாங்கிக் கொண்டிருந்த வாகன நிறுவனங்கள், அப்போது கண்ட இழப்பினை சரி செய்ய வாகன விலையினை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றன. ஆக அதனையும் ஈடுசெய்யும் விதமாக இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த முன்னணி ஆட்டோ நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமீபத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் பயணிகள் மற்றும் வர்த்தக வாகன விலையினை அதிகரித்தது. இதே மாருதி சுசூகி இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட சில நிறுவனங்களும் தங்களது வாகன விலையை அதிகரிக்கபோவதாக அறிவித்துள்ளன.
எம்ஜி மோட்டார் -விலை அதிகரிக்கும்
மேற்கண்ட அனைத்து நிறுவனங்களும் வரும் ஜனவரி 1, 2021 முதல் விலையினை அதிகரிக்க போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் மூலதன செலவு அதிகரிப்பு, உள்ளிட்ட பல செலவுகளை கருத்தில் கொண்டு அதன் தயாரிப்பு வரம்பில் விலை திருத்தத்தினை மேற்கொள்ள விருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வளவு அதிகரிக்கும்?
இந்த விலை அதிகரிப்பானது மாடலை பொறுத்து 3% வரை இருக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது ஜனவரி 1 முதல் அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எம்ஜி மோட்டார்ஸ் தற்போது சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவில் மூன்று ரக கார்களை விற்பனை செய்கிறது. அது எம்ஜி ஹெக்டார், எம்ஜி ZS EV, Gloster உள்ளிட்ட ரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனவரி அறிமுகம்
எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா தனது விளையாட்டு பயன்பாட்டு வாகனமான ஹெக்டர் பிளஸின் செவர் சீட்டர் (Hector Plus) வாகனத்தினை ஜனவரி 2021ல் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் இந்த நிறுவனத்தின் நான்காவது ரக காராகும். இதே நடப்பு ஆண்டின் ஜனவரியில் ZS electric sports utility vehicle என்ற வாகனத்தினை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விற்பனையை அதிகரிக்க விரிவாக்கம்
மேற்கண்ட இந்த மின்சார வாகனத்தினை இரண்டு மற்றும் மூன்றடுக்கு நகரங்களில், நாடு முழுவதும் விற்பனை செய்யும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் லித்தியம் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய, மின்னணு கழிவு மறுசுழற்சி சேவை வழங்குனரான TES-AMMவுடன் கூட்டணி சேருவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக