அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினியின் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியாகி, வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக ரஜினி தெரிவித்துள்ளார். இவரது கட்சி ’மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ’ஆட்டோ’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகின. ஆனால் கட்சி தலைமை உறுதி செய்யும் வரை ரசிகர்கள் காத்திருக்குமாறு
ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான
விடை வரும் டிசம்பர் 31ஆம் தேதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பூத் கமிட்டி அமைப்பதற்கான
வேலைகளை ரஜினி முடுக்கிவிட்டுள்ளார். கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான
வேலைகளில் ரஜினி தீவிரம் காட்டி வருவது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை
ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டியின் பங்கு மிகவும்
முக்கியமானது. இவர்கள் வீடு வீடாக சென்று கட்சியின் செல்வாக்கை உயர்த்த
பாடுபடுவர். வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்க வருகை புரிய வைப்பதில் பூத்
கமிட்டியின் செயல்பாடுகள் அவசியமானது.
இதற்கான பணிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர்
தமிழருவி மணியன் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த வாரம் மாவட்ட
செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினர். அதில் மன்ற உள்கட்டமைப்பு, நிர்வாகம், கிளைகள்
அமைப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சூழலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் பெற்றால் கட்சியில்
இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம்
எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத்
கமிட்டியில் நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 25ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, அதற்கான பட்டியலை
தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் வாங்கிக் கொண்டு சிலர் முறைகேட்டில்
ஈடுபட்டுள்ளனரா? இந்த விவகாரம் கட்சியின் மேலிடத்திற்கு தெரிந்து இப்படியொரு
திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக