விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்துகின்ற வகையில் மஹிந்திரா நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
உலக நாடுகளின் கவனத்தையே ஈர்க்கும் வகையில் தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைதியான வழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை களைக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமே இருக்கின்றனர்.
கடும் குளிரைக்கூட பொருட்படுத்தாமல் அவர்கள் போராடிய வண்ணம் இருக்கின்றனர். மிக அமைதியான முறையில் நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு கனடா நாட்டு பிரதமர்கூட அவரது பாராட்டையும், ஆதரவையும் தெரிவித்திருக்கின்றார். இருப்பினும், மத்திய பாஜக அரசு விடாப்பிடியாக புதிய வேளான் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே வருகின்றனர்.
இதனால், விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்கும், மன உலைச்சளுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, விவசாய பணிகளுக்கு பயன்படக்கூடிய டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் அதிகம் விற்பனையாகக் கூடிய டிராக்டர்களில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வரும் டிராக்டர்களும் அடங்கும். பிற நிறுவனங்களின் டிராக்டர்களைக் காட்டிலும் மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்களுக்கே நாட்டில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் 2020 நவம்பரில் மஹிந்திரா டிராக்டர்கள் நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருந்தன.
ஒட்டுமொத்தமாக 31,619 யூனிட் மஹிந்திரா டிராக்டர்கள் விற்பனையாகியிருந்தன. இது கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். 2019 நவம்பரில் 20,414 யூனிட் டிராக்டர்களை மட்டுமே மஹிந்திரா விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் 2020 நவம்பர் விற்பனை மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியாகும்.
இவ்வாறு இந்திய சந்தையில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருகின்றநிலையில் மஹிந்திரா நிறுவனம் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் அதன் டிராக்டர்களின் விலையை உயர்த்த இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக சமீபத்தில்தான் தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக மஹிந்திரா அறிவித்திருந்தது. இதன் தாக்கமே மக்கள் மத்தியில் இருந்து நீங்காதநிலையில் விவசாய பணிகளுக்கு பயன்படக்கூடிய டிராக்டர்களின் விலையையும் மஹிந்திரா உயர்த்தியிருக்கின்றது. எவ்வளவு ரூபாய் உயர்த்தப்பட இருக்கின்றது என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
விரைவில் இதுகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகின்றது. இதனால், மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுமே அடுத்த வருடம் முதல் புதிய விலையுயர்வுடனே விற்பனைக்குக் கிடைக்கும். உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணத்தினாலயே இந்த விலையுயர்வை செய்திருப்பதாக மஹிந்திரா தரப்பில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக