Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 டிசம்பர், 2020

அபயா வழக்கு: கன்னியாஸ்திரியின் உல்லாசம், திருடனின் சாட்சி, 28 வருடம் கழித்து தீர்ப்பு!

கேரளாவில் கன்னியாஸ்திரி கொல்லப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றம் இறுதி விசாரணையை முடித்து, டிசம்பர் 23ம் தேதி (நாளை) தீர்ப்பை அறிவிப்பதாகக் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை விசாரித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. . மற்றொரு குற்றவாளி, ஜோஸ் பூத்ருகாயில் எதிராக தொடர எந்த ஆதாரமும் கிடைக்காததால், கடந்த ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

​அபயா வழக்கு

1992 மார்ச் 27 இல் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பியஸ் எக்ஸ் கான்வென்ட்டில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த கன்னியாஸ்திரி அபயா (19) கேம்பஸில் இருந்த கிணற்றில் இறந்து கிடந்தார். முதற்கட்டமாக வழக்கை விசாரணை செய்த கோட்டயம் போலீசார் அதை தற்கொலை என்று கருதினர். இதற்கிடையில், அபாயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டூரம் என சமூக ஆர்வலர் ஜோமன் புதன்புரக்கல் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணையில் முதற்கட்டமாக கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்துகொள்ளவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது ஆனால், குற்றவாளிகளை கண்டறிவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், வழக்கை தொடர புதிய சிபிஐ குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கன்னியுடன் பாதிரியார்கள்

அந்த குழு நடத்திய விசாரணையில் தான், கான்வென்டில் இருந்த பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செஃபி, மற்றொரு பாதிரியார் ஜோஸ் பூத்ரிக்காயில் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த அன்று அபயா கான்வென்ட்டின் சமையலறைக்கு தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, கன்னியாஸ்திரி செஃபியுடன் பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் ஜோஸ் பூத்ரிக்காயில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை அபயா பார்த்துவிடவே, விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று அபயாவை கன்னியாஸ்திரி செஃபி கோடாரியால் தாக்கியுள்ளார். பின்னர், இரண்டு பாதிரியார்களின் உதவியுடன் அபயாவை அங்கிருந்த கிணற்றுக்குள் வீசிவிட்டு தற்கொலை என்று நாடகமாடியுள்ளனர்.

ஜோஸ் பூத்ரிக்காயில் முன்னரே விடுவிப்பு

இதையடுத்து விசாரணை அறிக்கையில் மூன்று பேரையும் சேர்த்து சிபஐ குழு நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், தகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்க தவறியதாக இந்த வழக்கில் இருந்து ஜோஸ் பூத்ரிக்காயில் மட்டும் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் விசாரணை சிபிஐக்கு கை மாறிய போதே, அபயாவின் அங்கி மற்றும் டைரி போன்ற முக்கிய ஆதாரங்களை மாநில காவல்துறை வேண்டுமென்றே அழித்துவிட்டது தெரியவந்தது.

திருடன் கொடுத்த சாட்சி

இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் 2019 ஆகஸ்டில் தொடங்கியது, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொரோனா பயத்தை காரணம் காட்டி விசாரணை நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து அரசு தரப்பு 49 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அதில் முக்கிய சாட்சியான ராஜு அளித்த தகவல் வழக்கை முடித்து வைத்தது. அப்பகுதியில் சிறிய திருடனாக வளம் வந்த ராஜு பியஸ் எக்ஸ் கான்வென்ட்டில் இருந்து கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள விடுதிக்கு பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ரிக்காயில் இருவரும் அடிக்கடி சுவர் ஏறி குதிப்பதை பார்த்ததாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார்.

போலி கன்னியாஸ்திரி

அதுபோல, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கன்னியாஸ்திரி செஃபி, தன்னை கன்னித்தன்மையுடன் இருப்பவராக காட்டிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்திருந்ததையும் அரசு மருத்துவனை மகப்பேறு மருத்துவர் லலிதாம்பா நீதிமன்றத்தில் போட்டுடைத்தார். சாட்சியங்களை கேட்டறிந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே சனல் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் மீதான கொலை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட வழக்குகளை உறுதி செய்து இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

மேலும், தண்டனை விவரங்கள் புதன்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அந்த உத்தரவின் போது பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. அபயா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்வதற்காக ஒற்றை ஆளாய் போராடிய ஆர்வலர் ஜோமன் புதன்புரக்கல் இந்த வழக்கில் கதாநாயகனாக உள்ளார். ஒருவேளை அபயா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி இவர் அணுகாமல் இருந்திருந்தால் இது வெறும் தற்கொலை வழக்காகவே கடந்திருக்கும். தனது முயற்சிகளில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியும் ஜோமன், "எனது 28 ஆண்டுகால உழைப்பு பலனளித்தது," என்று நெகிழ்கிறார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக