Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மும்பை கிளப்பில் முன்னாள் கிரிக்கெட்டர் Suresh Raina கைது: விவரம் உள்ளே

 Suresh Raina, king of cameos, follows MS Dhoni into retirement | Sports  News,The Indian Express

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராந்த்வா உட்பட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மும்பை டிராகன்ஃபிளை கிளப்பில் நடத்தப்பட்ட சோதனையில், ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் குரு ராந்த்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சோதனையில் மும்பை கிளப்பின் ஏழு ஊழியர்கள் உட்பட மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை கிளப்பில் நடந்த சோதனையில் பாலிவுட் பிரபலம் சுசேன் கானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் கோவிட் விதிமுறைகளை (COVID Restrictions) மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்தவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) மற்றும் பாடகர் குரு ராந்த்வா ஆகியோரும் அடங்குவர் என சாஹர் காவல் நிலைய மூத்த அதிகாரி தெரிவித்தார். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராந்த்வா உட்பட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை (Mumbai Police) தெரிவித்துள்ளது. IPC-யின் பிரிவு 188 (அரச ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பிரிவு 269 (உயிருக்கும் உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய் பரவுவதற்கு வழிவகுக்கக்கூடிய செயலில் சட்டவிரோதமாக அல்லது அலட்சியமான முறைகளில் ஈடுபடுவது) பிரிவு 34 (பொதுவான நோக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்பட்ட செயல்கள்) ஆகிய பிரிவுகளில் இவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு அப்பால் ஸ்தாபனத்தை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கும், COVID-19 விதிமுறைகளைப் பின்பற்றாததற்கும் டிராகன்ஃபிளை பப்பில் நடந்த சோதனைக்குப் பின்னர் இந்த கைதுகள் செய்யப்பட்டன.

திங்களன்று, மகாராஷ்டிரா அரசாங்கம், பிரிட்டனில் (Britain) பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி நிறுவனங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.

புத்தாண்டுக்கு முன்னதாக, மகாராஷ்டிரா அரசு (Maharashtra Government) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதிலும் குறிப்பாக மும்பையில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 5 வரை பொது நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக