காதலி இல்லாமல் கூட இருந்துவிடலாம். காது இல்லாமல் இருக்கமுடியுமா? நம்மை சுற்றியுள்ள அனைத்து இரைச்சல்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ள நமக்கு பயன்படுவது ஹெட்போன்கள் என்றால் மிகையாகாது. ஆனால் சந்தையில் ஏகப்பட்ட ஹெட்போன் வகைகள் நிரம்பி வழிகின்றன.
இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பல்வேறு நிறுவனங்கள் தனித்துவமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹெட்போன் உள்ளிட்ட பல ஆடியோ சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
ரியல்மி பட்ஸ் 2
ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போன் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த சாதனம் ஆகும். இந்த ரியல்மி பட்ஸ் 2 மாடலில் 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர், மல்டி-லேயர் கம்போசிட் டையகிராம் மற்றும் ஜப்பான் டைகோ வாய்ஸ் காயில் போன்றவை இடம்பெற்றுள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 3.5 எம்.எம். பிளக் கொண்டிருக்கும் இந்த ஹெட்போன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் பெரும்பாலான மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சாதனம் கருப்பு, பச்சை உள்ளிட்ட சில நிறங்களில் மட்டுமே கிடைக்கும்.
மேலும் இதனுடன் கேபிள் ஆர்கனைசர், பில்ட்-இன் மேக்னெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன் கேபிள் அடிக்கடி சிக்கிக் கொள்ளாது. அழகாகவும், அதிக உறுதித்தன்மை கொண்ட விலை குறைந்த ஹெட்போனாக ரியல்மி பட்ஸ் 2 இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் மேம்பட்ட சவுண்ட் மற்றும் வடிமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த realme Buds 2 Wired Headset மாடலை ரூ.499-விலையில் வாங்க முடியும்
.மோட்டோரோலா Pace 130 in-Ear ஹெட்போன்
மோட்டோரோலா Pace 130 in-Ear ஹெட்போன் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Rich base மற்றும் தெளிவான ஒலி வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் 1.2 மீட்டர் tangle free கேபிள் வசதி, அமேசான் அலெக்சா, சிரி மற்றும் கூகிள் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட ஆதரவுகளையும் கொண்டு இந்த
மோட்டோரோலா Pace 130 in-Ear ஹெட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்துடன் மைக் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரகளும் இருப்பதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் வலைத்தளத்தில் மோட்டோரோலா Pace 130 in-Ear ஹெட்போன் மாடலை ரூ.386-விலையில் வாங்க முடியும்.
ரெட்மி Hi-Resolution ஹெட்போன்
ரெட்மி Hi-Resolution ஹெட்போன் ஆனது இன்-லைன் மைக், மல்டி-ஃபன்ஷன் பட்டன், அலுமினியம் அலாய் பாடி, சிலிகான் மற்றும் 1.25 எம்எம் நீள கேபிள் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இதில் அலுமினியம் சவுண்ட் சேம்பர், 10 எம்எம் டைனமிக் டிரைவர் வழங்கப்பட்டு இருக்கிறது. பிளேஃபாஸ் மியூசிக், அழைப்புகளை ஏற்க /நிராகரிக்க பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக இதில் சிலிகான் இயர்பிளக், மெஷ் ஆன்டி-இயர்வேக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்ஸ் ஜாக், அலுமினியம் பாடி, பிரீமியம் பில்டு கொண்டிருக்கிறது. இதன் எடை 13 கிராம் எடை கொண்டது. ரெட்மி Hi-Resolution ஹெட்போன் மாடல் ஆனது பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாதனத்தை ரூ.399-விலையில் வாங்க முடியும்.
போட் Bassheads 103 ஹெட்போன்
போட் Bassheads 103 ஹெட்போன் மாடல் ஆனது நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும். மேம்பட்ட ஆடியோ வசதியை வழங்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த மாடல். மேலும் சக்திவாய்ந்த bass வசதி இவற்றுள் இருப்பதால் உங்களுக்கு பிடித்த பாடலை அருமையாக கேட்க முடியும். அதேபோல் மல்டிஃபங்க்ஷன் கன்ட்ரோல், உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.399-க்கு வாங்க முடியும்.
ஜேபிஎல் C50HI ஹெட்போன்
ஜேபிஎல் C50HI ஹெட்போன் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.479-விலையில் வாங்க முடியும். மேலும் சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும். Magnetic Earbuds, Integrated Multifunction Control, Built-in Microphone உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஜேபிஎல் C50HI ஹெட்போன் மாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக