டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்படவுள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நேற்று (டிசம்பர் 21) வெளியிட்டது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால், விலைகளை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகன உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணியின் தாக்கம் மற்றும் பிஎஸ்6 விதிமுறைகளுக்கு மாறியுள்ளது ஆகிய அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக வாகனங்களின் உற்பத்தி செலவுகளை அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே இதனை ஓரளவிற்கு ஈடு செய்யும் விதமாக வர்த்தக வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் வர்த்தக வாகனங்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்ற தகவலை டாடா மோட்டார்ஸ் இன்னும் வெளியிடவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தக வாகனங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, பயணிகள் வாகன உற்பத்தியிலும், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் திகழ்ந்து வருகிறது. புத்தாண்டு முதல் வர்த்தக வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ள அதே நேரத்தில், பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.
இதில், கிராவிட்டாஸ் மிகவும் முக்கியமானது. தற்போது விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் டாடா கிராவிட்டாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா கிராவிட்டாஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டிலேயே டாடா கிராவிட்டாஸ் கார் விற்பனைக்கு வந்து விடும் என்றுதான் முதலில் கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட சில பிரச்னைகளால் டாடா கிராவிட்டாஸ் காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார்களுக்கு கடுமையான போட்டியை டாடா கிராவிட்டாஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. ஆனால் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா 2021ம் ஆண்டியின் மைய பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 சீட்டர் கார்களின் மூன்று வரிசை இருக்கை வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் வாகன நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முன்னதாக இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதன்படி மாருதி சுஸுகி, ஃபோர்டு, எம்ஜி, கியா, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களுடைய வாகனங்கள் விலை வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து உயரவுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக