Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களே இது கட்டாயம்: சிறந்த பாதுகாப்பு மற்றும் முக்கிய செயலிகள் பட்டியல் உள்ளே!

 பாதுகாப்பற்ற செயலிகளை நீக்குவது அவசியம்

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம். செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவலும் புகைப்படம் என அனைத்தும் உட்பட வங்கி கணக்கு முதல் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது.

பாதுகாப்பற்ற செயலிகளை நீக்குவது அவசியம்

அதே செல்போனை பயன்படுத்தும் போதே பாதுகாப்பாக கையாளுவது என்பது முக்கியமான ஒன்று. பொழுதுபோக்கு செயலி என்பது பிரபலமடையும் பட்சத்தில் அதை தாமாகவே அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கி விடுகிறோம். அதே சமயத்தில் பாதுகாப்பு அற்ற செயலிகளை நீக்குவது என பட்டியலிடும் பட்சத்தில் அதை பொருட்படுத்துவது இல்லை.

கூகுள் மேப்ஸ் பயன்பாடு

அதேபோல் கூகுள் மேப்ஸ் பயன்பாடு ஏணையோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை இரவு நேர பயணத்தின்போதோ அல்லது ஏதாவது முக்கியமான பொருட்களை கொண்டு பயணிக்கும் போது தங்களது மொபைல் போனில் கூகுள் மேப்ஸ் லொகேஷனை ஆன் செய்து தங்களது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்து வைத்துக் கொள்ளலாம், இதன் மூலம் நாம் பயணிக்கும் இடத்தை துல்லியமாக பிறர் அறிந்துக் கொள்ளலாம்.

காவலன் செயலி

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் பாதுகாப்பில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காவலன் எஸ்ஓசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. செயலியை ஓபன் செய்து எஸ்ஓஎஸ் என்ற தேர்வை கிளிக் செய்யும்போது காவல்துறை ஜிபிஎஸ் மூலம் தங்களது இருப்பிடத்தை அறிந்து டிராக் செய்ய தொடங்கும். அதோடு ஜிபிஎஸ் காட்டும் இடத்தில் காவல்துறை ரோந்து வாகன் வந்து நிற்கும்.

VithU App பயன்பாடு

ஆபத்தில் இருக்கும்போது அவசர எண்ணை டயல் செய்ய நேரமில்லாத பட்சத்தில் VithU பயன்பாடு மிக பயனுள்ளதாக இறுக்கும். இதில் SOS எச்சரிக்கையை உடனடியாக அனுப்ப அவசர பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்களில் எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Trusted Contacts பயன்பாடு

இதன் மூலம் தங்களின் நம்பகமான தொடர்புகள் நீங்கள் எங்கிருந்தாலும் தங்களின் இருப்பிடத்தை அறிந்துக் கொள்ள முடியும். அவர்களிடமிருந்து உங்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் உங்களை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன்மூலம் தங்களது குடும்பத்தினரிடோ அல்லது நம்பகமானவர்களோடோ தொடர்ந்து இணைந்திருக்க முடியும்.

Kids Security- GPS Phone Tracker, Child Locator

ஜிபிஎஸ் டிராக்கர் பயன்பாடான இது பெற்றோர்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை அறிய உதவுகிறது. குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களின் கண்களுக்கு முன்பாக இருப்பதில்லை. அலுவலகத்துக்கோ அல்லது பிற இடத்துக்கோ செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் இதை பதிவிறக்கம் செய்து தங்களது சாதனத்தை இணைத்தால் அவர்களை எளிதாக டிராக் செய்யலாம்

Avast Mobile Security

பல அச்சுறுத்தலான வைரஸ்களில் இருந்து தங்களது மொபைலை பாதுகாக்க இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஆண்ட்ராய்டு சாதனங்கள் பயன்பாடாகும்.

Find My Device

இது ஆண்ட்ராய்டு சாதன பயன்பாடாகும். இது ஆண்ட்ராய்டு சாதனத்தை தொலைவில் இருந்தும்கூட கண்டுபிடிக்க உதவுகிறது. ஸ்மார்ட்போன் தங்களிடம் இருந்து தொலைந்துவிட்டது என தெரியும்பட்சத்தில் இந்த செயலியின் மூலம் சாதனத்தில் உள்ள முழு தரவையும் முற்றிலுமாக அழிக்கலாம்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக