கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோட்டத்தை அலங்கரிக்க வண்ணக் கொடிகளை பெண் ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் வீட்டு வந்த நிலையில் அதற்குள் இருந்த பாக்கெட் ஒன்றை கண்டு அந்த பெண் அதிர்ச்சியில் உரைந்துபோகியுள்ளார்.
அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர் பழக்கம்
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.
நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயக்கம்
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை அலங்கார பொருட்கள்
இந்த நிலையில் அமெரிக்காவின் இல்லினோயிஸ் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரியா எல்லிஸ் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோட்டத்தை அலங்கரிக்க வண்ணக் கொடிகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் வீட்டு வந்த நிலையில் அதற்குள் இருந்து மற்றொரு பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த பார்சல்
ஆண்ட்ரியா எல்லிஸ் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது பாட்டி வீட்டு தோட்டத்தை அலங்கரிக்க கடந்த சில வாரங்களுக்கு முன் வண்ணக் கொடிகளை டிபார்ட்மென்ட் ஸ்டோரின் மூலம் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்துள்ளதையடுத்து அந்த பார்சலை எல்லிஸ் திறந்து பார்த்துள்ளார்.
மர்மமான பாக்கெட்
பார்சலுக்குள் வண்ணக் கொடிகளுடன் வித்தியாசமான பாக்கெட் ஒன்று இருந்துள்ளது. அந்த பாக்கெட்டை எடுத்து எல்லிஸ் பார்த்த போது அதில் Biohazard (உயிருக்கு ஆபத்து) என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பைக்குள் ஒருவரின் கொரோனா பரிசோதனை மாதிரி இருந்ததை கண்டு எல்லிஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்
இதையடுத்து எல்லிஸ் உடனடியாக அந்த பகுதி காவல்நிலையத்துக்கும், சுகாதார துறைக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அந்த பாக்கெட்டை கைப்பற்றினர். அதோடு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எப்படி பார்சலுக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிட்-19 சோதனை மாதிரி
இதுகுறித்து ஆண்ட்ரியா எல்லிஸ் கூறுகையில், டெலிவரி பார்சலை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அத்தையிடம் இந்த எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள் என கூறியபடி ஒவ்வொன்றாக வெளியே எடுத்தேன். அப்போது உள்ளே மர்மமான பாக்கெட் ஒன்று இருந்தது. அதை வெளியே எடுத்த பார்த்தபோது அதில் ஒருவரின் கோவிட்-19 சோதனை மாதிரியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என கூறினார்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக