Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

அலெக்சாவின் துணையுடன் பட்ஜெட் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

இப்போது அறிமுகம் செய்துள்ள

டைவா (Daiwa) நிறுவனம் தனது புதிய 43-இன்ச் கியூஎஃப்எஸ் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் அலெக்சா ஒருங்கிணைப்புடன் வருகிறது. எனவே அலெக்சாவின் துணையுடன் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை மியூசிக்கை இசைக்க சொல்லலாம். அதேபோல் வானிலை பற்றி கேட்க முடியும், நியூஸ் அப்டேட்களை கோரலாம், அலாரங்கள் மற்றும் நினைவூட்டல்களை செட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிவந்த தகவலின்படி, டைவா நிறுவனம் வரும் வாரங்களில் அதன் 32-இன்ச் மற்றும் 39-இன்ச் எச் ரெடி மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளது. பின்பு இது தவிர, ஸ்மார்ட் ஏசிகள் போன்ற அலெக்சா வழியாக கட்டுப்படுத்தப்படும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டைவா நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள கியூஎஃப்எஸ் ஸ்மார்ட் டிவி மாடலை ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை கடைகளில் வாங்க கிடைக்கும். அதேபோல் இதன் பேனலின் மீதான கூடுதல் ஓராண்டு உத்தரவாதத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை மை டைவா ஆப்பில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டைவா 43-இன்ச் டி 43 கியூஎஃப்எஸ் ஸ்மார்ட் டிவி மாடல் குவாண்டம் லுமினிட் டெக்னாலஜியுடன் புல் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1920x1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

குறிப்பா இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் மிருதுவான மற்றும் தெளிவான பட வெளியீட்டிற்கு 1.07 பில்லியன் கலர்களையும் ஆதரிக்கிறது. அதேபோல் இந்த டிவி பிரத்யேக கிரக்கெட் மற்றும் சினிமா பிக்சர் மோட்கள் சரவுண்ட் சவுண்ட் உடன் 20வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், குவாட் கோர் ஏ 53 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது டைவா 43-இன்ச் டி 43 கியூஎஃப்எஸ் ஸ்மார்ட் டிவி. பின்பு இதனுடன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த டிவி மாடலில் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அடிப்படையிலான பிக் வால் யுஐ மூலம் இயங்குகிறது.

டைவா 43-இன்ச் டி 43 கியூஎஃப்எஸ் சாதனத்தில் கிளவுட் டிவி சான்றளிக்கப்பட்ட ஆப்ஸ்களான - டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஈரோஸ் நவ், வூட் மற்றும் பலவற்றோடு 25,00,000 மணிநேர கன்டென்ட் அணுகல் வழங்கப்படுகிறது. பின்பு இந்த சாதனம் அமேசான் ப்ரைம், நெட்பிலிக்ஸ்,யூடியூப் போன்ற ஆப்களையும் ஆதரிக்கிறது. அதேபோல் ஆப்களை அலெக்சா இயக்கும் ரிமோட் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் சோனி எல்ஐவி ஆப்கள் இந்த டிவி ரிமோட்டில் பிரத்யேக பட்டன்களைக் கொண்டுள்ளன. பின்பு எளிதான கட்டுப்பாடுகளுக்கு ஒரு மவுஸ் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது.

டைவா 43-இன்ச் டி 43 கியூஎஃப்எஸ் சாதனத்தில் Content Discovery search engine (சிடிஇ) உள்ளது. பின்பு இது தன்னியக்க ஓடிஏ அப்டேட்களைப் பெறும் என்று டைவா நிறுவனம் கூறியுள்ளது. மூன்று எச்.டி.எம்.ஐ, இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ப்ளூடூத் மற்றும் ஸ்கிரீன் மிரரிங்கிற்கு உதவும் ஈ-ஷேர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.24,490-ஆக உள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக