இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ (NSO) (குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus spyware), மூலம் சுமார் 12 பத்திரிகையாளர்களின் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கனடாவை தளமாகக் கொண்ட சிட்டிசன் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அல் ஜசீரா (Al-Jaseera) பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான 36 தனிப்பட்ட தொலைபேசிகளை ஹேக் செய்ய அரசு நிர்வாகிகள் என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தினர் என கூறப்படுகிறது. இது தவிர லண்டனை தளமாகக் கொண்ட அல் அராபி டிவியில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளரின் தனிப்பட்ட தொலைபேசியும் ஹேக் செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கிஸ்மெட் (KISMET) எனப்படும் ஒரு சாஃப்வேர் மூலம் முக்கிய பத்திர்க்கையாளர்களின் ஐபோன்கள்(iPhone) ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, NSO குழுமம் மற்றும் பேஸ்புக் (Facebook) இடையில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இஸ்ரேலிய ஸ்பைவேர் தயாரிப்பாளர் பெகாசஸ் என்னும் ஸபை வேரை வாட்ஸ்அப்பில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் 1,400 வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பானோர் பிரபலங்கள். இஸ்ரேலிய நிறுவனம், அதன் சர்ச்சைக்குரிய உளவு மென்பொருள் பெகாசஸ் மூலம் கடந்த ஆண்டு குறைந்தது 1,400 வாட்ஸ்அப் பயனர்களை ஹேக்கிங் செய்தது தொடர்பான ஆதாரங்களை பேஸ்புக் (Facebook) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய iOS 14 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் KISMET என்னும் சாஃப்வேரை கொண்டு ஹாக் செய்ய முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து iOS சாதனங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக அதனது ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்ய வேண்டும் எனவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இத்தாலி (Italy) ஆகிய நாடுகளில் கிளவுட் ப்ரொவைடர்களான அருபா, சூபா, கிளவுட் சிக்மா மற்றும் டிஜிட்டல் ஓஷன் அகியவற்றை பயன்படுத்தும் சர்வர்கள் மீது தாக்குதல் நடத்தவும் டிஜிட்டல் கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக சிட்டிசன் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் .
ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிள் (Apple) நிறுவனத்துடன் இந்த பகிர்ந்துள்ளனர், மேலும் நிறுவனம் இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக