உலகளவில் மிகவும் பிரபலமான பம்பிள் டேட்டிங் ஆப் 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஐபிஓ வாயிலாகத் தனது நிறுவனத்தைப் பட்டியலிட முடிவு செய்துள்ளது.
டின்டர் ஆப்-ன் துணை நிறுவனரான விட்னி உல்பி ஹெர்டு 2014 பம்பிள் டேட்டிங் ஆப்-ஐ உருவாக்கினார், இந்த ஆப் தற்போது அமெரிக் பங்குசந்தையில் 2021ஆம் ஆண்டின் காதலர் தினத்தில் பட்டியலிட விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பம்பிள் டேட்டிங் ஆப் ஐபிஓ குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை என்ற போதிலும், இத்தகவல் உறுதியென ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
பம்பிள் டேட்டிங் ஆப் ஐபிஓ-விற்காக தற்போது கோல்டுமேன் சாச்சீஸ், சிட்டி குரூப், மோர்கன் ஸ்டானிலி ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் டேட்டிங் ஆ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டின்டர் ஆப்-க்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட பம்பிள் ஆப்-ல் பெண்கள் தான் முதலில் விருப்பத்தைத் தெரிவிக்க முடியும். இந்தப் பிரத்தியேக சேவையின் காரணமாகப் பெண்களுக்கு மத்தியில் இந்த ஆ பெரிய அளவில் வரவேற்பை அடைந்தது.
மேலும் இந்த ஆப்-ல் லெகேஷன் அடிப்படையில் விருப்பமானவர்களைத் தேர்வு செய்ய முடியும் என்பதால் நகரங்களில் இந்தச் செயலி அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க துவங்கியது.
தற்போது பம்பிள் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது மட்டும் அல்லாமல் 10க்கும் அதிகமான மொழியில் இந்த ஆப் செயல்படுகிறது. இதனால் மொழி தடையில்லாமல் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது பம்பிள்.
பம்பிள் ஆப்-க்கு feminist dating app என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இதில் பெண்களுக்கான உரிமை முழுமையாகக் கொடுக்கப்படும் காரணத்தால் பெரும் பெண்களுக்குப் பிடித்தமான டேட்டிங் ஆப்-ஆக விளங்குகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக