Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 டிசம்பர், 2020

PUBG Update: பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

PUBG Update: பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

இந்தியர்களுக்கான சிறப்பு மொபைல் பதிப்பை PUBG கார்ப்பரேஷன் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஒரு புதிய வலைத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம் வெளிவந்துள்ளது.

தடைசெய்யப்பட்ட மொபைல் விளையட்டான PUBG பற்றி ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இந்த விளையாட்டு இந்தியாவில் மீண்டும் எப்போது தொடங்கும் என பலர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நிறுவனம் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த விளையாட்டை தொடங்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது

தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் ( Krafton Inc) இந்தியாவிற்கான புதிய மேலாளராக அனீஷ் அரவிந்தை நியமித்துள்ளது. அரவிந்த், 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். இவர் முன்பு டென்சென்ட் (Tencent) , ஜைங்கா (Zynga ) போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவில் PUBG Mobile India அறிமுகம் செய்யப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், PUBG மொபைலை இந்தியாவில் மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பதை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) தெளிவுபடுத்தியுள்ளது. GEM Esports தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது  பாதுகாப்பு காரணங்களுக்காக செப்டம்பரில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் PUBG உட்பட பல சீன (China)செயலிகளை நாட்டில் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் PUBG மொபைல் பதிப்பிற்கான APK  பதிவிறக்க இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. அதாவது இந்திய பதிப்பின் APK பதிவிறக்க இணைப்பு வலைத்தளத்தில் காணப்படுகிறது. இந்தியர்களுக்கான சிறப்பு மொபைல் பதிப்பை PUBG கார்ப்பரேஷன் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஒரு புதிய வலைத்தளம் மற்றும் பேஸ்புக் (Facebook) பக்கம் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் செயலியை மிகவும் பரவலாக அதிக அளவில், பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி செப்டம்பரில், PUBG உள்ளிட்ட  பல செயலிகளை அரசாங்கம் தடை செய்தது. இந்தியாவின் சந்தையில், ​​பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியர்களுக்காக பப்ஜி மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்போவதாக நவம்பர் 12 ஆம் தேதி,  அறிவித்தது. இதற்காக, PUBG கார்ப்பரேஷன் இந்தியாவில் ஒரு நிறுவனத்தையும் பதிவு செய்துள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக