பிற மொழிகளும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடையே இருக்கும். இதற்கு பலரும் கையாளும் முக்கிய வழிமுறைகள் மாற்று மொழி திரைப்படத்தை பார்ப்பது. மலையாளம், இந்தி போன்ற என பிற மொழிகளில் படம் பார்த்தாலும் அதற்கு நமக்கு பிரதான தேவையாக இருப்பது சப்-டைட்டில். பிற மொழி படம் பார்த்தாலும் கீழே ஆங்கிலத்தில் சப்டைட்டில் பார்த்தால்தான் சிலருக்கு புரியும்.
அதேபோல் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் அறிய வேண்டும் என்றாலும் அதை தமிழில் மொழிபெயர்த்து பார்ப்போம். தற்போதைய காலத்தில் ஏராளமானோர் ஆங்கில வார்த்தைகளே வாட்ஸ்ஸ்டேட்டஸ் முதல் அனைத்திலும் பயன்படுத்துகின்றனர். சிறந்த மொழிமாற்ற செயலிகள் குறித்து பார்க்கலாம்.
கூகுள் டிரான்ஸ்லேட்
கூகுள் மொழிபெயர்ப்பு என்பது மிக பிரபலமடைந்த செயலிகளில் ஒன்றாகும். கூகுள் டிரான்ஸ்லேட் என்பது பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கூகுள் டிரான்ஸ்லேட் செயலியானது ஆங்கில மொழி மீது கேமரா காண்பிக்கும் போது அது தங்களது மொழிக்கு ஏற்ப அதை மாற்றி கொடுக்கிறது.
தேவையான மொழிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
கூகுள் டிரான்ஸ்லேட் செயலி தானாக பயனர்கள் பேசும் மொழியை அறிந்து சீரான அம்சத்தை வழங்குகிறது. இந்த அம்சத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ஆஃப்லைனில் இருக்கும்போது கூட இந்த வசதியை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
iTranslate
ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் மிக பிரபலமான மொழிபெயர்ப்பு செயலிகளில் iTranslate ஒன்றாகும். இதில் நூற்றுக்கணக்கான மொழிகளின் அணுகல்கள் கிடைக்கிறது. இது மொழி மாற்ற செயலியாகவும், டிக்சனரியாகவும் பயன்படுகிறது.
ட்ரிப்லிங்க (Triplingo) செயலி
ட்ரிப்லிங்கோ என்பது அற்புதமான ஆன்லைன் மொழிபெயர்ப்பு பயன்பாடாகும். இந்த ஆன்லைன் பயன்பாட்டில் தடையற்ற அனுபவத்தை பெற முடியும். மொழிபெயர்ப்பு தொடர்பான விஷயங்களில் சிறந்த வழிகாட்டு முறைகளை இது வழங்குகிறது. சர்வதேச அளவில் பயன்படும் இந்த செயலியானது குரல் மொழிபெயர்ப்பாகவும் பயன்படுகிறது.
ஈசி லேங்குவேஜ் டிரான்ஸ்லேட்டர் (Easy Language Translator)
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த செயலி சிறந்த தேர்வாகும். இதை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இது எழுத்து மூலமாகவும் குரல் மூலமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்ப்பு செய்ய உதவுகிறது.
மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பாளர் (Microsoft Translator)
ஆண்ட்ராயட் பயன்பாடுக்கான பயன்பாடாக மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பு செயலி இருக்கிறது. இது தங்களது உரை, குரல் அல்லது படங்களை மொழிபெயர்ப்பு செய்ய உதவுகிறது. அதோடு நிகழ்நேர வீடியோ மொழிபெயர்ப்பு வசதியையும் இது வழங்குகிறது. பல்வேறு தேவைக்கு இந்த செயலி பயன்பட்டு வருகிறது
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக