இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அதிநவீன கேமராக்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9
மேலும் இப்போது ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்
வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியை கொண்டிருக்கும் என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.9-இன்ச் Quad HD+ டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ
அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ்
குறிப்பாக ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில்
மேலும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.
விலை
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் வெளிவரும். ஆனால் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ
அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்களில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக