Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 ஜனவரி, 2021

சுவையான நெய் சாதம் செய்வது எப்படி...?

Ghee rice

தேவையான பொருட்கள்: 

 

நெய் - 4 டேபிள் ஸ்பூன் 

முந்திரி பருப்பு - 15 

கிஸ்மிஸ் - 3 டேபிள் ஸ்பூன் 

வெங்காயம் - 2 

பிரியாணி இல்லை - 2 

ஏலக்காய் - 3 

நட்சத்திர சோம்பு - 1 

கிராம்பு - 4 

பட்டை - 1 

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 3 

பஸ்மதி அரிசி - 2 கப் 

உப்பு - தேவையான அளவு 

 

செய்முறை: 

 

முதலில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுக்கவும். அதே வாணலியில் ஒரு பிடி வெங்காயம் போது வறுத்து தனியாக  எடுக்கவும். பின்னர், பிரியாணி செய்யும் வாணலியில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் கழுவி வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.

பின்னர், 2 டம்ளர் அரிசிக்கு
  மூன்றரை கப் தண்ணீருடன் உப்பு சேர்த்து கிளறி வேகவைக்கவும். சாதம் நன்றாக வெந்ததும் கொஞ்சம் நெய் ஊற்றி, வறுத்துவைத்த முந்திரி, வெங்காயம் சேர்த்து  கிளறி இறக்கவும். சுவையான நெய் சாதம் தயார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!