Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 மார்ச், 2021

பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் டிடெக்டர்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------------------------------

 

ஒருவன் தன்னுடைய வீட்டில் பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் லை டிடெக்டரை வாங்கிக் கொண்டு வந்தான்.

 

'இது எதற்கு?" என்று அவன் மனைவி கேட்டாள்.

 

'இது யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்துவிடும். நம்முடைய வீட்டுக்கு அவசியம் தேவை" என்று அவன் கூறினான்.

 

அந்த நேரம் பார்த்து அவனுடைய மகன் வீட்டிற்கு லேட்டாக வந்தான்.

 

'எங்கே போய் சுத்திட்டு வர்றே? என்று கேட்டார் அப்பா.

 

அதற்கு மகன், 'ப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்" என்று கூறினான்.

 

உடனே அந்த மிசின் பொய்... பொய்... என்று கத்தியது.

 

உடனே அப்பா சந்தோசமாக, பாத்தியா இந்த மிசின் கண்டுபிடிச்சிருச்சு.

 

உன்னோட வயசுல நான் பொய்யே சொன்னதில்லை என்று அப்பா பெருமிதமாக கூறினார்.

 

உடனே அந்த மிசின் மறுபடியும் பொய்... பொய்... என்று கத்தியது.

 

அப்பாவிற்கு அவமானமாகப் போய்விட்டது.

 

இதனைப் பார்த்த அவனுடைய மனைவி, 'உங்களை மாதிரித்தானே உங்க மகனும் இருப்பான்" என்று கூறினாள்.

 

உடனே லை டிடெக்டர் சத்தமாக பொய்... பொய்... என்று கூவ ஆரம்பித்துவிட்டது.

 

இதைக் கேட்டதும் கணவனும், மனைவியும் திருதிருவென விழிக்க ஆரம்பித்தனர்.😳😂

----------------------------------------------------------------

ஹார்ட் அட்டாக்-ன்னா என்ன மச்சி?

----------------------------------------------------------------

 

பஸ் ஸ்டாப்-ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அப்ப உன்கிட்ட வந்து 'இந்த லவ் லெட்டர்-ஐ உங்க நண்பர்கிட்ட (நான்தான்) கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு... 

 

💔அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்...😎😇

----------------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா?

----------------------------------------------------------------

எறும்பு தின்னிகள் எனப்படும் மிருகங்களுக்கு பற்களே கிடையாது.

 

ஒரு எறும்பால் தன்னைவிட 20 மடங்கு அதிகமான எடையைச் சுமக்க முடியும்.

 

பைசா கோபுரம் சலவைக் கற்களால் கட்டப்பட்டது.

 

கொரில்லா எனப்படும் மனிதக் குரங்கு குறட்டை விடுவதில்லை.

 

தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக