
பொதுவாக இன்சூரன்ஸ் திட்டங்கள் என்றாலே நமக்கு நியாபகத்திற்கு வருவது எல்ஐசி தான். ஏனெனில் பொதுத்துறையை சேர்ந்த ஒரு மிகப்பெரிய நிறுவனம், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை உண்டு.
இதனாலேயே பலரும் LICயில் பாலிசியை எடுப்பர். அப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தினை பற்றித் தான் பார்க்க இருக்கின்றோம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பாலிசியின் பெயர் LIC பச்சட் பிளஸ் திட்டம். அதெல்லாம் சரி, இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்? எப்படி இணைவது மற்ற விவரங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஏன் இந்த பாலிசியை எடுக்க வேண்டும்?
LICயின் இந்த பச்சட் பிளஸ் திட்டத்தில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. முதிர்வு ஆண்டு வரை பிரீமியம் செலுத்த தேவையில்லை. இன்னும் தெளிவாக செல்லவேண்டுமானால் குறிப்பிட்ட காலம் என்று கூட கூற வேண்டியதில்லை. குறுகிய காலம் பிரீமியம் செலுத்தினாலே போதுமானது. கட்டண பிரீமியங்கள் 80சி பிரிவு கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10டி) கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
வயது வரம்பு என்ன?
ஒற்றை பிரீமியம் என்றால், குறைந்தபட்ச வயது வரம்பு A & B ஆப்சன் (option A & B) இரண்டிற்கும் 90 நாள் வயது. இதே அதிகபட்ச வயது ஆப்சன் A-யில் 40 வயதாகும். ஆப்சன் B-யில் 70 வயதாகும்.
இதே 5 வருட பாலிசியில் குறைந்தபட்ச வயது 90 நாள் (ஆப்சன் 1) ஆப்சன் இரண்டில் குறைந்தபட்ச வயது 40. இதில் அதிகபட்ச வயது ஆப்சன் ஏ-யில் 60 வயதாகும். ஆப்சன் பி-யில் 65 வயதாகும்.
எவ்வளவு காப்பீடு?
குறைந்தபட்ச காப்பீடு 1 லட்சம் ரூபாயாகும். அதிகபட்ச வயது வரம்பு என்பது கிடையாது. இதே பிரீமியம் செலுத்தும் காலம் என்பது இருவகையாக உள்ளது. அதாவது ஒற்றை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். 5 வருடத்திற்கும் பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம். இதே பாலிசி காலம் என்பது 10 முதல் 25 ஆண்டுகள் வரையாகும்.
கடன் வசதி
இந்த பாலிசி எடுத்த இரண்டு வருடங்களுக்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளலாம். இதே இரண்டு வருடங்களுக்கு பிறகு சரண்டரும் செய்து கொள்ளலாம். இந்த பாலிசியில் இறப்பு பலனும் உண்டு. பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது இறந்து விட்டால் நாமினிக்கு இறப்பு காப்பீட்டு தொகை + லாயல்டி கிடைக்கும். எனினும் பாலிசி 5 வருடம் நிறைவு பெற்றபின்பு தான் கிடைக்கும்.
இறப்பு பலன் விகிதம்
இந்த பச்சட் பாலிசியில் ஒற்றை பிரீமியத்தில் ஆப்சன் ஏவில் இறப்பு பலன் என்பது வருட பிரீமியத்தில் 10 மடங்கு இருக்கும். இதே ஆப்சன் பியில் 1.25 மடங்கு தான் இருகும்.
இதே 5 வருட பாலிசியில், ஆப்சன் 1-ல் வருட பிரீமியத்தில் 10 மடங்கு இறப்பு பலனாக கிடைக்கும். இதே ஆப்சன் 2-ல் வருட பிரீமியத்தில் 7 மடங்கு கிடைக்கும்.
முதிர்வு பலன்
இந்த திட்டத்தின் முதிர்ச்சியின் போது அதாவது பாலிசி காலம் முடிந்ததும், பாலிசிதாரர் அடிப்படை காப்பீட்டு தொகை மற்றும் loyalty addition தொகையை பெறுவர்.
எனினும் ஆப்சன் 1 மற்றும் ஆப்சன் 2னை பொறுத்து உங்களது க்ளைம் மாறும். ஆக உங்கள் வயது, பிரீமியம் என எல்லாவற்றையும் கணக்கில் வைத்து, அதற்கேற்ப திட்டமிடலாம். அதோடு எதிர்காலத்தில் உங்கள் தேவை எவ்வளவு? என தீர்மானித்து, சரியான ஆலோசகரிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக