
சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள புஜின் நகருக்கு அருகே படமாக்கப்பட்ட ஒரு இரவுநேர வீடியோவில், அடையாளம் தெரியாத பறக்கும் உருவம் என்று அழைக்கப்படும் UFO போன்ற உருவம் ஒன்று, இரவு வானத்திலிருந்து மெதுவாக இறங்கி கிராமப்புற நகரத்திற்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உருவம் மிகவும் பிரகாசமான வெள்ளை விளக்குகள் கொண்ட நீண்ட பாதையைக் காட்டுகிறது.
அதிகாலை 3 மணி.. இரவு வானம்.. அணிவகுத்து சென்ற அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்
இந்த கிளிப் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இவை வரிசையாகக் குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் உள்ளூர் கிராமப்புற நகரத்திற்குள் நுழைந்துள்ளது என்று வீடியோவை பதிவு செய்த நபர் தெரிவித்துள்ளார். இவை அணிவகுத்துச் சென்ற யுஎஃப்ஒக்களின் வரிசையாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ, வானத்திலிருந்து ஒரு பெரிய பிரகாசமான ஒளி இறங்குவதைக் காட்டுகிறது.
ஒன்றன்பின் ஒன்றாக சென்ற சிறிய-சிறிய விளக்குகள்
அதே நேரத்தில் இந்த வீடியோ வானத்தில் சிறிய-சிறிய விளக்குகளையும் காட்டுகிறது. நேரில் இதை அடையாளம் கண்ட நபர், இதன் விளக்குகள் உண்மையில் வண்ணமயமாக இருந்தது என்றும், பதிவு செய்யப்பட்ட வீடியோவில் அது வெள்ளை நிறத்தில் தோன்றியுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள்கள் 30 விநாடிகள் வானத்தில் இருந்தன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
தரையிறங்ககுவது போல் கீழ் வானம் நோக்கி நகர்ந்த பொருள்கள்
கேமராமேன் ஜூம் செய்யும் போது, அந்த பொருள் ஒரு விண்கல் போன்ற தோற்றத்தில் இல்லாமல், வேகமாக நகரும் இடைவேளை கொண்ட பொருள் என்று கண்டுபிடித்துள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், அது தரையிறங்கவிருக்கும் ஒரு விமானத்தைப் போல மெதுவாக கீழ் வானம் நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. லியு என்பர் மேலும் கூறுகையில், வானத்தில் இந்த பிரகாசமான வண்ண விளக்குகளை முதலில் பார்த்தேன்.
யுஎஃப்ஒ பற்றிய விவாதங்களைத் தூண்டிய வீடியோ
அவற்றை ஒரு விண்கல் என்று தவறாகக் கருதினேன், ஆனால் விரைவில் விளக்குகள் வண்ணமயமானவை என்றும் அவற்றின் முன் முனைகள் பெரியவை என்பதை நான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ விரைவில் சீன சமூக ஊடகங்களில் வைரலாகி யுஎஃப்ஒக்கள் பற்றிய விவாதங்களைத் தூண்டியது. இந்த பொருள் ஒரு காத்தாடி அல்லது அதிக உயரத்தில் ஒரு பாதையில் பயணிக்கும் ரயில் என்று பலர் ஊகித்தனர். சிலர் இது ஒரு விண்கல் என்று கூறினர்.
அது UFO இல்லை, வெறும் காத்தாடி.. மழுப்புகிறதா அரசாங்கம்?
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜியாமுசி கைட் அசோசியேஷனின் துணைத் தலைவர் லி ஸி ஒரு சீன விற்பனை நிலையத்திடம் இது யுஎஃப்ஒ அல்ல, வெறும் காத்தாடி என்று கூறியுள்ளார். ஆனால், இதை நம்ப முடியாது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம், ஹவாய் தீவான ஓஹுவில் வசிப்பவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கடலில் காணாமல் போன ஒரு மர்ம பொருளை இரவு வானத்தில் கண்டனர் என்று அப்போதே கூறப்பட்டது.
சீனாவில் உள்ள பல பகுதி மக்கள் ஒரே நேரத்தில் பார்த்த உண்மை நிகழ்வு
ஓஹு தீவின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் டிசம்பர் 29 அன்று இரவு 8:30 மணியளவில் இரவு வானத்தில் ஒரு பெரிய யுஎஃப்ஒவைக் கண்டதாகக் கூறியுள்ளனர். ஒருவர் மட்டும் அப்படிக் கூறியிருந்தால் இதைப் பொய் என்றோ அல்லது அவர் சரியாக கவனிக்கவில்லை என்றோ ஒரு முடிவுக்கு நாம் வந்திருக்கலாம். ஆனால், பல பகுதியில் உள்ள மக்கள் ஒரே மாதிரியாகச் சொல்வது பொய் என்று நம்ப முடியவில்லை என்பதே இங்கு மிகப்பெரிய குழப்பமாக இருக்கிறது.
UFO பற்றிய உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்
யார் சொல்வதை நாம் நம்புவது என்று தெரியவில்லை. UFO போன்ற அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் உண்மையில் பூமியில் பல இடங்களில் பல மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது காத்தாடியா அல்லது UFO என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக