
சாம்சங் சேவை மையங்களுக்கு நுகர்வோர் வருகை தருவதை குறைக்கும் நடவடிக்கையாக நிறுவனம் மொபைல் சாதனங்களை தங்கள் வீட்டில் இருந்தே பழுதுபார்க்கும் டிராப்-ஒன்லி (Drop-Only) சேவையைத் தொடங்கி இருக்கிறது
புதிய பிக்-அப் மற்றும் டிராப் சேவை
மொபைல் சாதனங்களுக்கு புதிய பிக்-அப் மற்றும் டிராப் சேவையை சாம்சங் தனது தொடர்பில்லா சேவை சலுகைகளாக நாட்டில் விரிவுப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் புதிய பிக்-அப் மற்றும் டிராப் சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் சாதனம் பழுதுபார்க்கும் பிக்-அப் மற்றும் டிராப் அண்ட் டிராப் ஒன்லி சேவையை பயனர்கள் ரூ.199 மற்றும் ரூ.99 என்ற பெயரளவு வசதிக் கட்டணத்தில் பெறலாம். நுகர்வோர் பல டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் மூலம் சேவைக்கான கட்டணத்தை செலுத்தலாம்.
டிராப்-ஒன்லி சேவை
சாம்சங் சேவை மையங்களுக்கு வருகை தரும் நுகர்வோர்களை குறைத்து வீட்டில் இருந்து இடுகை மூலம் பழுது பார்ப்புக்கு பெறுவதற்கு டிராப்-ஒன்லி சேவையை தேர்வு செய்யலாம். இது சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் பயனர்களுக்கு தங்கள் சாதனங்கள் சேவையை வழங்குவதில் வீட்டு பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.
சூழ்நிலைகளுக்கு ஏற்ப சேவை புரியப்படும்
ஊரடங்கு உத்தரவுகளை கடைபடித்து கட்டுப்பாடு மண்டலுக்கு ஏற்ப சேவை புரியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கேலக்ஸி ஏ. கேலக்ஸி எம், கேலக்ஸி எஸ், கேலக்ஸி எஃப், கேலக்ஸி நோட் மற்றும் கேலக்ஸி ஃபோல்ட் தொடர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் சேவைக்கு இதை பதிவு செய்யலாம். நுகர்வோர் வீடுகளில் இருந்து சாதனங்களை கொடுப்பது மற்றும் திரும்பப் பெறுவதற்கு பணிபுரியும் பணியாளர்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
தொற்று காலம் என்பதால் வாடிக்கையாளர்கள் வெளியில் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சாம்சங் அதன் நுகர்வோருக்கு பல தொடர்பில்லா சேவை விருப்பங்களை அறிமுகம் செய்கிறது. பயனர்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க இது உதவுகிறது. பயனர்கள் வாட்ஸ்அப், ரிமோட் சப்போர்ட், லைவ் சேட், கால் சென்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவையின் மூலம் இதை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக