
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் உக்கிர தாண்டம் ஆடி வருகிறது என்ற தான் கூறவேண்டும். மேலும் இந்த கொரோனா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.
கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.
கொரோனா ஹெல்ப் டெஸ்க்
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் கொரோனா ஹெல்ப் டெஸ்க் (MyGov Corona Helpdesk) மூலம் அருகாமையில் இருக்கும் தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
ட்விட்டர் வழியே வந்த தகவலின்படி, ஒருவர் வாட்ஸ்அப் செயலியில் 9013151515 என்ற எண்ணில் Namaste என்று டைப் செய்ய வேண்டும். அதன்பின்பு chatbot ஒரு தானியங்கு பதிலை உருவாக்கும். அதில் உங்களுக்கு அருகில் உள்ள கோவிட் தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடிக்க உங்களது ஊரின் ஆறு இலக்க பின்(PIN) குறியீட்டை டைப் செய்ய வேண்டும்.
அடுத்து உங்களுக்கு அருகாமையில் இருக்கும் தடுப்பூசி மையங்களின் பட்டியலுடன், MyGovIndia chat bot ஆனது Cowin வலைத்தளத்தின் மூலம் கோவிட் -19 தடுப்பூசி பதிவுக்கான இணைப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி பல்வேறு மக்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் இந்த ஹெல்ப் டெஸ்க் ஆனது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி இரண்டையும் ஆதரிக்கிறது. அனைவரும் ஆங்கிலத்தை தான் அதிகளவு பயன்படுத்துவார்கள் என்றாலும், ஒருவர் இதில் ‘இந்தி' அல்லது हिंदी என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் மொழியை இந்திக்கு மாற்றலாம். குறிப்பாக தடுப்பூசி மையங்களை எளிமையாககண்டுபிடிக்க இந்த வசதி அருமையாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக