Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 ஜூன், 2021

ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்.. உலகம் முழுக்க இருந்து வந்த காசு.. மோசடி வழக்கில் 5 பேர் கைது

ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி ஆன்லைன் மூலம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் நன்கொடை என்ற பெயரில் நடந்த இந்த மோசடியின் பின்னணியில் 5 நபர்கள் மட்டுமே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் எப்படி மோசடி செய்தார்கள் என்றும், எப்படி காவல்துறையின் வலையில் சிக்கினார்கள் என்றும் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் ஒன்றை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் நன்கொடை என்ற பெயரில் பக்தர்களிடம் பண மோசடியில் சில மர்ம கும்பல் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

நன்கொடை பெயரில் மோசடி செய்த மர்ம கும்பல்

அதன் பெயரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் இருப்பது உறுதியானது. பின்னர் அதன் வழியாக பண மோசடி நடப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து நொய்டா சைபர் கிரைம் போலீசாரும், லக்னோ சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 5 பேர் டில்லியின் புதிய அசோக் நகரில் இருந்து இந்த மோசடியை நடத்திவருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா - ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா - போலி ராமர் கோவில் மோசடி சங்கம்

ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக் கணக்கு இது தான் என்று மோசடிக்காரர்கள் ஒரு வங்கியின் கணக்கையும் வலைப்பக்கத்தில் இணைத்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்குவோர் இந்த வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது.

உலகம் முழுக்க இருக்கும் பக்தர்கள் செலுத்திய லட்சக் கணக்கான நன்கொடை

இப்படி உலகம் முழுக்க இருக்கும் பக்தர்கள், இந்த போலி வலைப்பக்கம் அசல் தான் என்று நம்பி அவர்களின் நன்கொடையைச் செலுத்தி வந்துள்ளனர்.இந்த கும்பல் போலி இணையத்தளம் மூலம் மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நம்பி ஏமாற வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை

இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்களில் 3 பேர் அமேதி பகுதியைச் சேர்ந்தவர்கள், அதில் மற்ற 2 நபர்கள் பீஹாரை சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள அசோக் நகரில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நம்பக தன்மை இள்ளதாக போலி வலைத்தளங்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக