-------------------------------------
செம காமெடி...!!
-------------------------------------
ஆசிரியர் : உங்கப்பா 10 சாக்லேட் வாங்கி, அதில் ஒன்னை சாப்பிட்டு வெச்சாருக்கார்... மீதி எத்தனை இருக்கும்?
மாணவன் : எட்டு சார்!
ஆசிரியர் : எப்படி?
மாணவன் : அவருக்குத் தெரியாம நான் ஒன்னை எடுத்துக்குவேன்ல...
ஆசிரியர் : 😳😳
-------------------------------------
குமார் : டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுகுமார் : சுனில் பவுடர்.
குமார் : என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுகுமார் : சுனில் செண்ட்.
குமார் : என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுகுமார் : சுனில் ஹேர் ஆயில்.
குமார் : ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
சுகுமார் : இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
குமார் : 😛😛
-------------------------------------
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...!!
-------------------------------------
நாம் அறிந்த விளக்கம் :
பழமொழி கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.
விளக்கம் :
இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக