எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் அடுத்த க்ராஸ்ஓவர் எஸ்யூவி காராக எம்ஜி ஒன் மாடலை சீனாவில் இருந்து உலகளவில் வெளியிடவுள்ளது. இதற்கிடையில் இந்த எம்ஜி காரின் தோற்றம் ஒவ்வொரு பகுதியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள எம்ஜி மோட்டாரின் இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கும் எம்ஜி ஒன் என்கிற பெயரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இந்த பிரிட்டிஷ் கார் பிராண்ட் எம்ஜி ஒன் தொடர்பான டீசர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. முற்றிலும் புதிய சிக்மா கட்டமைப்பில் புதிய எம்ஜி ஒன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்குதளத்தில் எலக்ட்ரிக் & எரிபொருள் என்ஜின் கொண்ட வாகனங்களை வடிவமைக்க முடியும்.
மேலும், இத்தகைய இயக்குத்தளத்தில் கட்டமைக்கப்படுவதால், எம்ஜி ஒன் அதிநவீன எலக்ட்ரிக் இயக்குதளத்தின் திறன்கள், ஆக்டிவ் டிஜிட்டல் ஈக்கோ சிஸ்டம் மற்றும் மென்பொருள் நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி காராக விளங்கவுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் முழுக்க முழுக்க ஐரோப்பியன் டிசைன் மொழியில் எம்ஜி ஒன் காட்சியளிக்கிறது. முன்பக்கத்தில் கோண ஹெட்லேம்ப்கள், கருப்பு நிறத்தில், வித்தியாசமான வடிவில் க்ரில் உள்ளன. இத்தகைய முன்பக்கத்தை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு எம்ஜி காரும் கொண்டில்லை.
காரின் வெளிப்பக்கத்தில் மற்ற கவரும் டிசைன் அம்சங்களாக, பொனெட் & பக்கவாட்டு பகுதியில் அதிக க்ரீஸஸ், புதுமையான வடிவில் டெயில்லேம்ப்கள், கருப்பு நிறத்தில் பில்லர் & பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் உள்ளிட்டவை சொல்லலாம்.
இதன் மேற்கூரை பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் பின்பக்கத்தில் பம்பரை இரட்டை நிறத்தில் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எம்ஜி ஒன் மாடலில் வழக்கமான 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட உள்ளது.
அதிகப்பட்சமாக 177.5 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதனுடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸையும் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம்.
எம்ஜி ஒன் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் உலகளாவிய வெளியீடு வருகிற ஜூலை 30ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிறகே இந்த எம்ஜி கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் அறிமுகத்திற்கு பிறகு ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஒன் விளங்கவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக