Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 24 ஜூலை, 2021

ஜியோவின் ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஜியோ நிறுவனம் ரூ.3499

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஜியோ நெக்ஸ்ட் 4ஜி ஸ்மாரட்போன் ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் குறைவான விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோ
நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தனித்துவமான திட்டங்களை வைத்துள்ளது.

குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் குறிப்பிட்ட நன்மைகளைமட்டுமே வழங்குகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் வழங்கும் உயர்வானவிலை திட்டங்களில் அதிகமான சலுகைகள் வழங்கப்படுகிறது என்றேதான் கூறவேண்டும்.

அதன்படி ஜியோ நிறுவனம் ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டத்தை தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் அதிக நன்மைகள் வழங்கப்படுகிறது என்றே கூறலாம். இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ்கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு ஜியோ ரூ.3499 திட்டத்துடன் ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோடிவி, ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஆனாலும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்றஒடிடி தளங்களுக்கான சந்தா எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ஒருவேளை நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா தேடும் பயனர்கள் என்றால் ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் ஜியோ நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தனசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆனால் 2ஜிபி டேட்டா முடிந்ததும், வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், Disney+ Hotstar சந்தா,ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோக்ளவுட் அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்திய சந்தையில் கிடைக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த சாதனத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை, குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டுமே தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக