
இப்போது
வரும் புதிய ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது
என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நமது தினசரி வேலைகளை மிகவும் சுலபமாக
செய்து முடிக்கிறது ஒரு சில ஆப் வசதிகள். ஆனாலும் பிளே ஸ்டேரில் நீங்கள்
ஆப் வசதியை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதாவது ஒரு சில ஆப் வசதிகள் நமது தகவல்களை திருடும்.
ஸ்மார்ட்போன்களை
பாதிக்கும் ஆபத்தான மால்வேர் பரவல் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துக்கொண்டே
வருகின்றன. இந்நிலையில் மோசமான ஜோக்கர் மால்வேர் மீண்டும் தனது வேலையை
காட்டியுள்ளது. அதாவது அண்மையில் வெளிவந்த தகவல் என்னவென்றால், பிளே
ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் ஜோக்கர் மால்வேர் பரவியிருப்பதை
சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக இந்த தகவலை முதலில் வெளியிட்டது ZDNet என்பது குறிப்பிடத்தக்கது. ஜோக்கர் மால்வேர் பொதுவாக பயனர்களின்
முக்கியத்
தகவலை திருடும். அதாவது தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும்
பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன. மேலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட்
கார்டுகளின் விவரங்களை கூட இந்த ஜோக்கர் மால்வேர் திருடும் என்பது
குறிப்பிடத்தக்கது.
இப்போது ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட அந்த 11 ஆப்களின் பட்டியலைப் பார்ப்போம்.
- Free Affluent Message
- PDF Photo Scanner
- delux Keyboard
- Comply QR Scanner
- PDF Converter Scanner
- Font Style Keyboard
- Translate Free
- Saying Message
- Private Message
- Read Scanner
- Print Scanner
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆப்களில் ஜோக்கர் மால்வேரை கண்டறிந்ததும் கூகுள்
நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை
நீங்கள் மேற்குறிப்பிட்ட 11 ஆப்களில் எதாவாது ஒன்றை பயன்படுத்தி வந்தாலும்
கூட அதை உடனே டெலிட் செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் முக்கிய தகவல்கள்
திருடுபோக வாய்ப்பு உள்ளது.
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள ஆப் வசதிகளை 30000-க்கும் அதிகமான மக்கள் பதிவிறக்கம்
செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த ஆப்கள் நிதி மோசடியை
நடத்துவதாக கூறப்படுகிறது. எனவே இவற்றை வேகமாக டெலீட் செய்வது நல்லது.
அதேபோல் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை நீக்கிய
வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக