
கூகிள் குரோம் பயனர்களுக்கு நிச்சயமாக இந்த டினோ (Dino) கேம் பற்றித் தெரிந்திருக்கும். தற்பொழுது கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்த கூகிளின் டினோ விளையாட்டின் ஒரு புதிய அப்டேட் படத்தைப் பகிர்ந்து அதன் கீழ் "தனது சர்ஃபிங் திறன்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்" என்று கமெண்ட் செய்துள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுவதைத் தொடர்ந்து இந்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
கூகிள் குரோம் பயனர்கள் ஆப்லைனில் இருக்கும் பொழுது இந்த டினோ கேமை விளையாட முடியும். நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த கேமை விளையாடிய அனுபவம் இருக்கும். குரோம் பயனர்களுக்கு டேட்டா இணைப்பு இல்லாத நேரத்தில் எழும் ரிலோட் நோட்டிபிகேஷன் உடன் இந்த டினோ உருவம் தோன்றும். உங்கள் கீபோர்டில் இருக்கும் ஸ்பேஸ் பட்டனை அழுத்தினால் கேம் துவங்கும்.
இந்த அழகான குட்டி டி-ரெக்ஸ் டைனோசர் நெருங்கி வரும் கற்றாழை மீது படாமல் தாவி தப்பிப்பது கேமின் விளையாட்டாக உள்ளது. தூரம் அதிகமடைய டினோ ஓடும் ஓட்டத்தின் வேகம் அதிகமாகிறது. பின்னர் குறிப்பிட்ட செக்பாயிண்ட்டை அடைந்தவுடன் பகல் பொழுதில் ஓடிக்கொண்டிருந்த டினோ இரவு நேரத்தில் ஒடத் துவங்கும். இப்போது இந்த கேமிங் முறையில் ஒலிம்பிக்ஸ் போட்டியை முன்னிட்டு புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இப்போது இது கூகிளின் டினோ விளையாட்டின் மறைக்கப்பட்ட ரத்தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட்டின் படி, இப்போது இந்த கேமை விளையாடும் பயனர்கள் வழக்கம் போல ஸ்பேஸ் பார் பிரஸ் செய்து விளையாட்டைத் துவங்கலாம். ஆரம்பத்தில் பழைய கேமிங் ஸ்டைலில் ஆரம்பிக்கும் கேம், சில வினாடிகளில் டினோ ஓடும் பாதையில் ஒரு ஒலிம்பிக்ஸ் ஜோதியுடன் காட்சியளிக்கிறது. இதைப் பயனர்கள் தாவாமல் நேரடியாக டினோ மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீங்கள் ஒலிம்பிக்ஸ் ஜோதியை பிடித்தவுடன் பாலைவனத்தில் ஓடிய டினோ, கடல் பகுதியில் சர்பிங் போர்டு உடன் டினோ கடலில் மிதக்கத் துவங்குகிறது. கடல் பாதையில் இடையில் வரும் பாறைகளை நீங்கள் இப்போது கடந்து விளையாட வேண்டும். ஒலிம்பிக்ஸ் போட்டியை முன்னிட்டு இந்த அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்போது கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பகிர்ந்த விளையாட்டு தொடர்பான இடுகை மக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இந்த பதிவைப் பகிரப்பட்டதிலிருந்து சுமார் 8,600 -க்கும் மேற்பட்ட நபர்கள் லைக்குகள்ச் சேகரித்துள்ளது. மேலும், எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. தயாரிப்பைப் பாராட்டும் பல ட்வீட்களைப் பகிர்ந்துள்ளனர். ஒரு சிலர் கருத்து தெரிவிக்கும்போது மகிழ்ச்சியின் பாதையை எடுத்துக் கொண்டனர். இதில் ஒரு பயனர் "ஒரு டைனோசர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து குதிரை சவாரி செய்வதை நான் கண்டது இதுவே முதல் முறை" என்று கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக